மத்திய அரசின் பட்ஜெட் ஒரு பெகாசஸ் ஸ்பின் பட்ஜெட்...- மம்தா தாக்கு! விகடன் Daily

"Federal Budget is a Pegasus Spin Budget ..." - Mamta Attack! Vikatan Daily

மத்திய அரசின் பட்ஜெட் ஒரு பெகாசஸ் ஸ்பின் பட்ஜெட்...- மம்தா தாக்கு! விகடன் Daily

சாதாரண பொது மக்களுக்கு பட்ஜெட்டில் பூஜ்யம்தான் இருக்கிறது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

2022- 2023-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை நேற்று குடியரசுத் தலைவரின் உரையுடன் தொடங்கியது. இரண்டாவது நாளான இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். நிர்மலா சீதாராமன் 4-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 2-வது ஆண்டாகக் காகிதமில்லா டிஜிட்டல் பட்ஜெட் தாக்கலானது. மத்திய பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சியினர் பலரும் தங்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

BUDGET HAS ZERO FOR COMMON PEOPLE, WHO ARE GETTING CRUSHED BY UNEMPLOYMENT & INFLATION. GOVT IS LOST IN BIG WORDS SIGNIFYING NOTHING - A PEGASUS SPIN BUDGET

இது குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது டவிட்டரில், ``வேலையின்மை மற்றும் பணவீக்கத்தால் நசுக்கப்படும் பொது மக்களுக்கு பட்ஜெட்டில் எதுவும் இல்லை. இது ஒரு பெகாசஸ் ஸ்பின் பட்ஜெட்" என்று பதிவிட்டிருக்கிறார்.