ம.பி.யில் இறுதிச் சடங்கில் நடனமாடி நண்பரின் கடைசி ஆசையை நிறைவேற்றிய நபர்

ம.பி.யில் இறுதிச் சடங்கில் நடனமாடி நண்பரின் கடைசி ஆசையை நிறைவேற்றிய நபர்
ம.பி.யில் இறுதிச் சடங்கில் நடனமாடி நண்பரின் கடைசி ஆசையை நிறைவேற்றிய நபர்

போபால்: மத்​திய பிரதேச மாநிலம் மண்ட்​சவுர் மாவட்​டத்​தில் உள்ள ஜவாசியா கிராமத்​தைச் சேர்ந்​தவர்​கள் ஷோஹன்​லால் ஜெயின் (71), அம்​பலால் பிரஜாபதி (51). இவர்​கள் இரு​வரும் மிக நெருங்​கிய நண்​பர்​கள். ஷோஹன்​லால் கடந்த இரண்டு ஆண்​டு​களாக புற்​றுநோ​யால் போ​ராடி வந்த நிலை​யில் அண்​மை​யில் சிகிச்சை பலனின்றி உயி​ரிழந்​தார்.

ஆனால் சாவதற்கு முன்​பாக அவர் எழு​திய கடிதத்​தில் தனது இறுதி ஊர்​வலத்​தின்​போது எனது உயிர் நண்​பர் அம்​பலால் பிரஜாபதி நடன​மாடி என்னை வழியனுப்பி வைக்க வேண்​டும் என்று கேட்​டிருந்​தார். ஷோஹன்​லாலின் கடைசி ஆசையை நிறைவேற்​றும் வித​மாக அவரது நண்​பர் அம்​பலால் இறு​திச் சடங்​கில் பங்​கேற்று கண்​ணீருடன் நடன​மாடி​னார். இந்த வீடியோ தற்​போது சமூக வலை​தளங்​களில் வைரலாகி உள்​ளது.

இதுகுறித்து அம்​பலால் கூறுகை​யில், “எனது நண்​பருக்கு சத்​தி​யம் செய்து கொடுத்​திருந்​தேன். அவரது இறுதி ஊர்​வலத்​தின்​போது நடனம் ஆடு​வேன் என்​று. அதனை இப்​போது நிறைவேற்​றி​யுள்​ளேன். நண்​பருக்​கும் மேலானவர் அவர். ஷோஹன்​லால் எனது நிழல் போன்​றவர்’’ என்​றார்.

நல்ல நட்​புக்கு இது​தான் உதா​ரணம், இறந்த பிறகும் உண்​மை​யான நட்பு எப்​போதும் உயிருடன் இருக்​கும் என்​பதை இந்த சம்​பவம் நிரூபிக்​கிறது’’ என நெட்​டிசன்​கள் பலர் தங்​களது கருத்​துகளை தெரி​வித்து வரு​கின்​றனர்​.