ஒடிசாவில் பாம்பு கடித்த தாயை 5 கி.மீ. தூரம் தோளில் சுமந்து சென்ற மகள்: காலதாமதத்தால் பறிபோன உயிர்

ஒடிசாவில் பாம்பு கடித்த தாயை 5 கி.மீ. தூரம் தோளில் சுமந்து சென்ற மகள்: காலதாமதத்தால் பறிபோன உயிர்

புவனேஸ்வர்: ஒடி​சா​வில் சாலை வசதி இல்​லாத​தால் பாம்பு கடித்த தாயை சிகிச்​சைக்​காக 5 கி.மீ. தூரம் தோளில் சுமந்து சென்றுள்ளார் அவரது மகள். ஆனால் கால​தாமதத்​தால் தாய் பரி​தாப​மாக உயி​ரிழந்​தார்.

ஒடிசா மாநிலம் கந்​தர்​பால் மாவட்​டம் துமேரிபடா கிராமத்​தைச் சேர்ந்த பாலமது மாஜியை கடந்த வெள்​ளிக்​கிழமை பாம்பு கடித்​துள்​ளது. இதை அறிந்த அவரது குடும்​பத்தினர் உடனடி​யாக ஆம்​புலன்​ஸுக்கு தகவல் தெரி​வித்​தனர்.

ஆனால், அந்த கிராமத்​துக்கு செல்​வதற்கு முறை​யான சாலை வசதி இல்​லாத​தால், 8 கி.மீ. தொலை​வில் உள்ள சாரா​முண்டி கிராமத்திலேயே ஆம்​புலன்ஸ் நின்​று​விட்​டது.

இதை அறிந்த பாலமது​வின் மகள் ரஜனி மாஜி, வேறு வழி​யின்றி தனது தாயை தோளில் சுமந்​த​படி கரடு​முர​டான பாதை​யில் 5 கி.மீ. தூரம் நடந்து சென்​றுள்​ளார். பின்​னர் இருசக்கர வாக​னம் மூலம் 3 கி.மீ. பயணித்து ஆம்​புலன்ஸ் வாக​னம் இருந்த இடத்​துக்​குச் சென்​றுள்​ளார். அங்​கிருந்து துமுடிபந்த் சுகா​தார மையத்​தில் அனுமதித்துள்ளனர்.

நிலைமை மோச​மாக இருந்​த​தால், அங்​கிருந்து பலிகுடா மருத்​து​வ​மனைக்கு அழைத்​துச் சென்​றுள்​ளனர். அங்கு பாலமதுவை பரிசோ​தித்த மருத்​து​வர்​கள், அவர் ஏற்​கெனவே இறந்​து​விட்​ட​தாக தெரி​வித்​தனர்.

பின்​னர் பிரேதப் பரிசோதனை முடிந்த பிறகு பாலமது​வின் உடலை கட்​டிலில் வைத்து சொந்த ஊருக்கு நடந்​த​படியே தூக்​கிச் சென்று அடக்​கம் செய்​துள்​ளனர்.

பழங்​குடி​யின மக்​கள் வசிக்​கும் மலை கிராம​மான துமேரிப​டாவுக்கு செல்ல முறை​யான சாலை வசதி இல்​லை. இதன் காரணமாகத்தான் பாலமதுவை உரிய நேரத்​தில் மருத்​து​வ​மனைக்கு அழைத்​துச் செல்ல முடி​யாத சூழல் ஏற்​பட்​டுள்​ளது.

சாலைவசதி இல்​லாததே பாலமது உயி​ரிழப்​புக்​குக் காரணம் என்று அவரது குடும்​பத்​தினரும் அந்த கிராம மக்​களும் குற்​றம் சாட்டி உள்​ளனர். இதே காரணத்​தால் ரஜனி​யின் தந்​தை​யும் உயி​ரிழந்​த​தாக அவரது குடும்​பத்​தினர்​ தெரி​வித்​துள்​ளனர்​.