RNS தேசியக்கட்சியின் தமிழ் மாநில செயல் தலைவருக்கு வான்புகழ் வள்ளுவர் விருது
Aerial Grower Award for RNS National Party Tamil State Executive Chairman

சந்தன மலை மாவட்டமாம் திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள, சந்தன மணம் கமழும் ஏலகிரி மலையில் நடந்த விழாவில் சிறந்த மக்கள் பணிக்கான விருதை, சர்வதேச அமைப்பான அகில இந்திய திருவள்ளுவர் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சர்வதேச தலைவர் டாக்டர். டி. ஆர். கவியரசு அவர்களின், தூய்மையான கரங்களால் ஆர்.என்.எஸ் (RNS) தேசியக் கட்சியின், தேசிய செயலாளர் மற்றும் மாநில செயல் தலைவர் திரு *மா.சீனிவாசன் அவர்கள் செய்த மக்கள் சேவையை
பாராட்டி " வான்புகழ் வள்ளுவர் விருது " வழங்கி பெருமை படுத்தினர்.
மேலும் அவர் கூறுகையில் என் சேவையைப் பாராட்டி அகில இந்திய திருவள்ளுவர் பத்திரிக்கையாளர் சங்கத்தின் தேசிய தலைவர், மேற்கு மண்டல தலைவர் மற்றும் அனைத்து நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.