இயற்கை தமிழ்நாடு விவசாயிகள் முன்னேற்ற தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருக்களித்து கூட்டம்

Natural Tamil Nadu Farmers' Progress Tamil Nadu All Farmers' Unions Convening Meeting

இயற்கை தமிழ்நாடு விவசாயிகள் முன்னேற்ற தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருக்களித்து கூட்டம்

10.04.2023  தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கம் மாநில தலைவரும் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாநில  பொருளாளர்  கொண்டலாம்பட்டி திரு. எம். தங்கராஜ் அவர்கள் சேலம், நாமக்கல் மாவட்டம் நீர்வளம் ஆதார் அமைப்பு  செயற்பொறியாளர் உயர்திரு .ஆனந்த் அவர்களை சேலம் நீர்வளம் ஆதார்

அமைப்பு அலுவலகத்தில் நேரில் சந்தித்து திருமணிமுத்தாறு ராஜ வாய்க்கால் பட்டர்பிளை பாலம்பைபாஸ் சாலையை கடந்து செல்லும் பொழுது நீர் வழி பாதையில் தேவையற்ற கழிவு பொருட்களை இரவு நேரங்களில் கொட்டிச் செல்வதால் வாய்க்கால் முழுவதும் நிரம்பி விவசாயிகள் பாசனத்திற்கு நீர் பயன்படுத்த முடியாமல் குட்டை போல் தேங்கி உள்ளதாலும் ,

தேவையற்ற கழிவுகளை கொட்டி செல்வதால்வாய்க்காலை அடிக்கடி தூர்வார வேண்டிய நிலை ஏற்படுவதாலும் பாசன  வாய்க்கால் கரையை  அளவிட்டு கம்பி வேலி அமைத்து தர திருமணிமுத்தா ராஜ வாய்க்கால் பாசன விவசாயிகள் சார்பில்கோரிக்கை மனு கொடுத்தார் நீர்வள ஆதார் அமைப்புசெயற்பொறியாளர் அவர்கள் உடனே நீர்வள ஆதார் அமைப்பு AE தேன்மொழி அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாய்க்கால் பகுதியை அளவிட நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார் ,அளவிட்டு கம்பி வேலி அமைத்து தருவதாக உறுதியளித்தார்.உடன் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள்  சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாவட்ட தலைவர் தங்கவேல், பனமரத்துப்பட்டி ஒன்றிய தலைவர் செல்வராஜ், கொண்டலாம்பட்டி இணைச் செயலாளர் கருணாகரன் உடன் இருந்தனர்.