இளைஞர்களின் எழுச்சி நாயகன் சுவாமி.விவேகானந்தர் ஜெயந்தி விழா இணையவழி நிகழ்ச்சி:
ஐந்திணை தென் தமிழியல் ஆய்வு மன்றம் மற்றும் சேவாபாரதி தமிழ்நாடு இணைந்து நடத்திய சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி விழா சிறப்பு நிகழ்ச்சி இணையதளம் வழியாக நடைபெற்றது
வீரத்தின் விளைநிலம் விவேகானந்தர் இளைஞர்களின் எழுச்சி நாயகன் என்ற தலைப்பில் முனைவர். துரை குமரேசன், சேவாபாரதி, ஈரோடு மாவட்ட தலைவர் மிக சிறப்பாக சிறப்புரையாற்றினார்
இந்த நிகழ்ச்சியில்
செல்வன். தமுத்ரா இளைஞர்களின் எழுச்சி நாயகன் சுவாமி விவேகானந்தரின்
வேடமிட்டு பொன்மொழிகள் கூறினார்.
இந்நிகழ்வில் திரு. அருள்வேலன் ஜி, திருமதி. திருவளர்ச்செல்வி, திருமதி வள்ளியம்மாள், திரு. காமராஜ், திரு. ராஜ சாரதி,
திரு. யுவராஜ் அவர்கள் பங்குபெற்று சிறப்பித்தனர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்தில் இருந்தும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு
சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள் எடுத்துரைத்தனர்.
இதில் கலந்து கொண்டவர்களைப் பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டினை மிகவும் சிறப்பாக ஐந்திணை தென் தமிழியல் ஆய்வு மன்றத்தின் நிறுவனத்தலைவி முனைவர். சுபத்ரா செல்லத்துரை அவர்கள் செய்திருந்தார்.