கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அசாம் இளைஞர் சிறையில் அடைப்பு
கும்மிடிப்பூண்டி அருகே 10 வயது சிறுமியை பாலியல் வன் கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி ராஜு பிஸ்வகர்மாவை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம்,கும் மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக் கம் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி, கடந்த 12-ம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டார். இச்சம்பவம் தொடர் பாக நேற்று முன்தினம் ஆந்திர மாநிலம், சூளூர்பேட்டை ரயில் நிலையத்தில் நின்று கொண் டிருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை, சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்தனர்.
இதையடுத்து கவரப்பேட்டை காவல் நிலையத்தில் அவரிடம் 20 மணி நேரத்துக்கும் மேலாக காவல்துறையினர் விசாரணை நடத்தினர். வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் நேரடியாக காவல் நிலையத்துக்கு வந்து குற்றவாளியிடம் விசாரணை மேற் கொண்டார். மேலும், தனிப்படை போலீஸார் சிக்கிய இளைஞரின் புகைப்படத்தை, பாதிக்கப்பட்ட சிறுமியிடம் போலீஸார் காட் டியபோது, அச்சிறுமி, தன்னை பாலியல் வன்கொடுமை செய் தவர் இவர் தான் என சொன்ன தாகவும், அவரின் அடையாளங் களை சிறுமி தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் போலீஸார் விசாரணையில் பிடிப்பட்ட நபர் அசாம் மாநிலம் தின்சுகியாவை சேர்ந்த கலே பிஸ்வகர்மா என்கிற ராஜு பிஸ்வகர்மா என்பதும் சூலூர்பேட்டையில் தாபா ஒன் றில் வேலை செய்து வருவதாகவும் தெரிய வந்தது. இரவு நேரத்தில் தாபாவில் பணி புரிந்து பகல் நேரத்தில் ஊரை சுற்றி திரிவதை ராஜூ வாடிக்கையாக வைத்துள் ளார். மேலும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததை அந்த நபர் ஒப்புக்கொண்டு வாக்கு மூலம் அளித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனை தொடந்து நேற்று காலை கவரப்பேட்டை காவல் நிலையத்தில் இருந்து சூலூர் பேட்டையில் அவர் பணியாற்றும் தாபாவுக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்காக கும்மிடிப் பூண்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று மீண்டும் கவரப்பேட்டை காவல் நிலை யத்துக்கு வந்தனர். இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உமா மகேஷ்வரி முன் ஆஜர்படுத் தினர். அவர் ராஜு பிஸ்வகர் மாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.



