வாங்கிய மெடலை பெருமை யோடு தாய்மை அறக்கட்டளைக்கு காட்ட வந்த வெற்றி மங்கை
இலக்கியா ஆசிய அளவிலான Power Lifting போட்டியில் கேரளா ஆலபுழா சென்று பங்கேற்று இரண்டாம் இடம் வென்று வந்துள்ளார்.இவர் கோவை ஒண்டிபுதூர் நெசவாளர் காலனி பகுதியை சேர்ந்தவர். தனக்குள் இருக்கும் திறமையை அறிந்து பல போட்டிகளில் பங்குபெற்று அதில் முதல், இரண்டாம், மூன்றாம் இடம் என வெற்றி பெற்று வந்துள்ளார். Power lifting போட்டியில் DEAD LIFT பிரிவில் -175 கிலோ எடையையும், BENCH PRESS பிரிவில் -122கிலோ எடையையும், SQUAT பிரிவில் -230 கிலோ எடையையும் தூக்கி அசத்தல் வெற்றி பெற்றுள்ளார். தவற விட்ட வெற்றியின் சில நுணுக்கங்களை அறிந்து கொண்டதன் மூலம் அடுத்த முறை முதல் நிலை பெறுவேன் என உறுதியோடு உள்ளார்.
நடந்து முடிந்த ஆசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ள செல்லும் பயண செலவில் குறிப்பிட்ட தொகையை தாய்மை அறக்கட்டளை அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் தாய்மை அறக்கட்டளை மூலம் இலக்கியா குறித்து அறிந்து, அவரை பரிந்துரை செய்த கோவை E1 காவல் ஆய்வாளர் திரு வினோத் அவர்கள் (சட்டம்& ஒழுங்கு) மேலும் ரூ 30,000 மதிப்பிலான Support Belt வாங்க வழிவகுத்தார். இலக்கியா வெற்றி பெற்ற செய்தியை பகிர்ந்து கொண்டதுடன், தான் பெற்ற மெடல் மற்றும் சான்றிதழை தாய்மை அறக்கட்டளைக்கு காட்ட வேண்டி, தாய்மை அறக்கட்டளையை தேடி வந்தார். அவருக்கு பொன்னாடை அணிவித்து, வாழ்த்துக்கள் கூறியது தாய்மை அறக்கட்டளை. 1100 இலவச நீத்தார் சேவைகள் வழங்கி 1100 க்கு மேற்பட்ட ஆன்மாக்களுக்கு உதவியுள்ள தாய்மை அறக்கட்டளையிடம் உதவி பெற்றதன் மூலம் அந்த 1100 ஆன்மாக்களும் உனக்கு ஏதோவொரு வகையில் துணை புரிந்திருக்கும் என அகமகிழ்வோடு பகிர்ந்து கொண்டோம். மேலும் பல வெற்றிகள் பெற வெற்றி மங்கை இலக்கியவை வாழ்த்துகிறோம்.