திருப்பூர் SSI சண்முகவேல் கொலை- கைது செய்யப்பட்ட குற்றவாளி என்கவுண்டரில் சுட்டுக்கொலை
சண்முகவேல் கொலை வழக்கில் 2 பேர் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சரண் அடைந்தனர்.
தலைமறைவாக இருந்த மணிகண்டன் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் மகேந்திரன் எம்.எல்.ஏ. தோட்டத்தில் நேற்று சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேல் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேல் கொலை வழக்கில் மூர்த்தி மற்றும் அவரது மகன் தங்கப்பாண்டியன் ஆகிய 2 பேர் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று சரண் அடைந்தனர். மேலும் தலைமறைவாக இருந்த மணிகண்டன் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேல் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட குற்றவாளி மணிகண்டன் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
தலைமறைவாக இருந்த மணிகண்டனை கைது செய்த போலீசார் அவரை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்றபோது போலீசாரை அரிவாளால் தாக்க முயன்றுள்ளார்.
மணிகண்டன் வெட்டியதில் காவல் உதவி ஆய்வாளர் சரவணனுக்கு கையில் காயம் ஏற்பட்ட நிலையில், அவரை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர்.


Yasmin fathima

