டிசிஎஸ், இன்டெல், டெல், மைக்ரோசாஃப்ட்.. கொத்தாக தூக்கப்படும் ஊழியர்கள்.. ஐடி துறை காலி.. போச்சு,

டிசிஎஸ், இன்டெல், டெல், மைக்ரோசாஃப்ட்.. கொத்தாக தூக்கப்படும் ஊழியர்கள்.. ஐடி துறை காலி.. போச்சு,
முன்னணி நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கானோரை பணிநீக்கம் செய்துள்ளன. இதில் இன்டெல், டெல், மைக்ரோசாஃப்ட் அடங்கும்.

சென்னை: மென்பொருள் துறையில் பெரும் பணிநீக்க அலை பரவி வருகிறது. இது உலக அளவில் கவலையை ஏற்படுத்துகிறது. பல முன்னணி நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கானோரை பணிநீக்கம் செய்துள்ளன. இதில் இன்டெல், டெல், மைக்ரோசாஃப்ட் அடங்கும்.

மேலும் டி.சி.எஸ்., ஐ.பி.எம்., சிஸ்கோவும் ஆயிரக்கணக்கானோரை நீக்கின. முன்னறிவிப்பு இன்றி பணிநீக்கம் செய்வது அறமற்றது. அரசு உரிய விதிகளை வகுக்க வேண்டும். ஊழியர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது முக்கியம். இத்தகைய கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

ஐடி துறை பாதிப்பு

ஐடி துறையில் கடந்த 1 வருடத்தில் மட்டும் 15%க்கும் அதிகமாக சரிவு ஏற்பட்டு உள்ளது. அதாவது 15%க்கும் அதிகமாக கிளைண்டுகள் குறைந்து உள்ளனர். இந்தியாவில் உள்ள அசெஞ்சர், இன்ஃபோசிஸ், விப்ரோ, டிசிஎஸ் போன்ற நிறுவனங்கள் தங்களின் வருவாயில் 11-18 சதவிகிதம் வரை இழந்து உள்ளன..

ஐடி சேவைகளுக்கான மதிப்புகள் குறைய தொடங்கி உள்ளன. இது ஐடி துறை வீழ்ச்சிக்கு முக்கியமான காரணமாக மாற தொடங்கி உள்ளது . ஐடி துறையில் அடுத்த ஆண்டு வளர்ச்சி 4%க்கும் குறைவாகவே இருக்கும். வர்த்தக போரால் இந்தியாவில் ஐடி துறை பாதிக்கப்பட தொடங்கி உள்ளது. இந்தியாவில் ஐடி துறையில் வரும் நாட்களில் வேலை இழப்புகள் இதனால் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

வர்த்தக போர் காரணமாக மும்பை பங்குச்சந்தை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. யோசித்து பார்க்க முடியாத அளவிற்கு மார்க்கெட் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. கடந்த 6 மாதங்களில் 10 மட்டும் ஆயிரம் புள்ளிகள் சென்செக்ஸ் வர்த்தகத்தில் சரிந்து உள்ளது. இந்திய மார்க்கெட்டில் இருக்கும் பல நிறுவனங்கள் கூடுதலாக மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. இவை இப்போது உண்மையான மதிப்பை நோக்கி சரிய தொடங்கி உள்ளன. வரும் நாட்களில் இவை மேலும் சரியும் வாய்ப்புகள் உள்ளன. இதுவும் ஐடி துறையை நேரடியாக பாதிக்கும்..

மென்பொருள் துறையில் பெரும் பணிநீக்க அலை:

இதில் இன்டெல், டெல், மைக்ரோசாஃப்ட் அடங்கும். மேலும் டி.சி.எஸ்., ஐ.பி.எம்., சிஸ்கோவும் ஆயிரக்கணக்கானோரை நீக்கின. முன்னறிவிப்பு இன்றி பணிநீக்கம் செய்வது அறமற்றது. அரசு உரிய விதிகளை வகுக்க வேண்டும். ஊழியர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது முக்கியம். இத்தகைய கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

தற்போதைய சூழலில், முன்னணி நிறுவனங்களில் ஆயிரக்கணக்கானோர் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர். Intel (21,400), Dell (12,500), TCS (12,000), Microsoft (9,000), IBM (8,000), Cisco (4,000) போன்றவை சில உதாரணங்கள். ஊழியர்களுக்கு முன்னறிவிப்போ, போதிய ஆதரவோ இன்றி, ஒரு மாத சம்பளம் கூட வழங்கப்படாமல் பணிநீக்கம் செய்யப்படுவது அறமற்ற செயல். இதைத் தடுக்க அரசு விதிகளை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம் 12,000 நிரந்தர பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து, தொழிலாளர் அமைச்சகத்திடம் தகவல் தொழில்நுட்ப ஊழியர் சங்கம் புகார் அளித்துள்ளது. இந்த நடவடிக்கை தற்போது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது...

TCS பணிநீக்க விவகாரம்: புகாரும் விசாரணையும்

புகாரில், TCS நிறுவனத்தின் பணிநீக்கம் குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிரந்தர ஊழியர்களை கட்டாயமாக வெளியேற்றுவது, மற்றும் புதிய நியமனங்களை தாமதப்படுத்துவது குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த கோரிக்கைகள் பணியாளர்களின் நலனை உறுதிப்படுத்துவதற்கான முயற்சியாக பார்க்கப்படுகிறது.

You May Also Like

BRICS: பாகிஸ்தான்தான் ஆடு.. ஆட்டத்தை கலைக்கும் அமெரிக்கா! இந்தியா உஷாராக வேண்டிய நேரமிது

"BRICS: பாகிஸ்தான்தான் ஆடு.. ஆட்டத்தை கலைக்கும் அமெரிக்கா! இந்தியா உஷாராக வேண்டிய நேரமிது"

இந்த புகாரின் அடிப்படையில், தொழிலாளர் அமைச்சகம் TCS நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு, விசாரணைக்கு உத்தரவிட வாய்ப்புள்ளது. இந்த நடவடிக்கை, பணியாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக இருக்கும். மேலும், இதுபோன்ற நடவடிக்கைகள் எதிர்காலத்தில் தவிர்க்கப்படவும் இது உதவும்.

பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் எதிர்காலம் குறித்த கவலைகள் எழுந்துள்ளன. தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், மற்ற நிறுவனங்களுக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்கும். இதன் காரணமாக, நிறுவனங்கள் ஊழியர்களை பணியமர்த்தும் போது கவனமாக இருக்க வேண்டும்.