எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மண்டல கூட்டம்
Nellie Mandal meeting of STBI party
எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மண்டல கூட்டம் மண்டல தலைவர் நாஞ்சில் சுல்பிகர் அலி தலைமையில் நெல்லை மேலப்பாளைய அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. மாநகர் மாவட்ட தலைவர் தலைவர் சாகுல்ஹமீது வரவேற்புரையாற்றினார்.
இதில் கண்ணியாகுமரி மாவட்ட தலைவர் அப்துல் சத்தார், பொதுச்செயலாளர் ஜாதிக் அலி, புறநகர் மாவட்ட தலைவர் எம்.கே பீர்மஸ்தான், மாவட்ட பொதுச்செயலாளர் களந்தை மீராசா, தூத்துக்குடி மாவட்ட தலைவர் உமர் பொதுச்செயலாளர் அப்துல் காதர் மற்றும் தென்காசி மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். மேலும் கிழ்கண்ட் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வருகின்ற அக்டோபர் 2 ஆம் தேதி நடக்க இருக்கும் கிராமசபை கூட்டத்தில் நெல்லை மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் கலந்து கொள்ள வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
நெல்லை மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் மழை காலங்களினால் சாலைகள் மிகவும் பழுதடைந்துள்ளது. எனவே இதனை சரி செய்யும் விதமாக தேசிய நெடுந்சாலை துறை அதிகாரிகளை சந்தித்து மனு அளிக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. நெல்லை மண்டல அனைத்து பகுதிகளிலும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, போன்ற இடங்களில் ஏற்படும் குடிநீர், மற்றும் சுகாதர பிரச்சனையை கையில் எடுத்து தீர்வுகாண வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.
இறுதியில் நெல்லை மாநகர் மாவட்ட பொதுச்செயலாளர் அலாவுதின் நன்றியுரையாற்றினர்.