பாரத மாதா கொண்டாடி மகிழ்ந்த சட்ட மாமேதை அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் விழா
Bharat Mata celebrated the birth anniversary of Chatta Ambedkar

கோவை உடையாம்பாளையம் பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் சார்பில் சட்ட மாமேதை அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் விழா(14-04-2023) பீளமேடு காந்தி மாநகர் பகுதியில் உள்ள அரவணைக்கும் அன்பு இல்லத்தில் உள்ள முதியவர்கள் - மாற்று திறனாளிகளுடன் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் முதியவர்களுக்கு அறுசுவை உணவை வழங்கியதுடன் இனிப்பு மற்றும் 11-வகையான கனிகள் வழங்கி கொண்டாடப்பட்டது. மேலும் அனைவரும் அம்பேத்கர் பிறந்தநாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இநாநிகழ்வில் நிர்வாகிகள் கெளரி சங்கர்.மனோஜ், மகாலட்சுமி, மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்