நெல்லை மாணவி நம்பி நாச்சியாருக்கு அகில இந்திய அறிவுசார் திறமைக்கு பாராட்டு .

Appreciation for Nellai student Nambi Nachiyar for all India intellectual talent.

நெல்லை மாணவி நம்பி நாச்சியாருக்கு அகில இந்திய அறிவுசார் திறமைக்கு  பாராட்டு .

திருநெல்வேலி பாளையங்கோட்டையைச் சார்ந்த மாணவி நம்பி நாச்சியார் ஆல் இந்தியா கவுன்சில் பார் டெக்னிகல் எஜுகேஷன் சார்பில் பாராட்டுச் சான்றிதழும் பரிசு தொகையும் பெற்றிருக்கிறார். அவரைப் பாராட்டி முன்னாள் மாமன்ற உறுப்பினர் டி.என். உமாபதி சிவன், நல்லுலகர் முனைவர் முத்துகிருஷ்ணன், பணி நிறைவு பெற்ற ஆசிரியர் த. அருணாச்சலம், முனைவர் கவிஞர் கோ கணபதி சுப்பிரமணியன் ஆகியோர் மாணவி நம்பி நாச்சியாரை பாராட்டி பொன்னாடை அணிவித்து புத்தக பரிசு வழங்கி பாராட்டினார்.

 ஒவ்வொரு ஆண்டும் ஏ.ஐ.சி.டி.இ (ஆல் இந்தியா கவுன்சில் பார் டெக்னிகல் எஜுகேஷன்) இதன் சார்பில் இந்தியன் அறிவுசார் துறை சார்பில் சிறந்த மாணவர்களை அகில இந்திய அளவில் தேர்வு செய்யப்பட்டு ரொக்கப் பரிசு ரூபாய் 25000 மும், பாராட்டு சான்றிதழும் வழங்கி பெருமைப்படுத்துகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற இண்டன்சிவ் தேர்வில் இந்தியா முழுக்க சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் கலந்து கொண்டார்கள். இதில் தமிழகத்திலிருந்து ஏழு மாணவ மாணவியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் பாளையங்கோட்டையைச் சார்ந்த மாணவி நம்பி நாச்சியார் கலந்து கொண்டார் இவர் கடந்த ஆண்டு எஃப் எக்ஸ் பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் பிஇ படித்து வந்தார் அப்போது இந்த தேர்வில் கலந்து கொண்டார் இந்த தேர்வில் மருந்தில்லா மருத்துவம் என்ற தலைப்பில் தன்னுடைய ஆராய்ச்சி ஆய்வேட்டை சமர்ப்பித்தார் அது சிறந்த ஆய்வேடாக தெரிவு செய்யப்பட்டு ரூபாய் 25000 மும் பாராட்டு சான்றிதழும் பெற்று இருக்கிறார் அண்மையில் டெல்லியில் நடைபெற்ற ஏ.ஐ.சி.டி.இ யின் தேசிய ஒருங்கிணைப்பாளர் கண்டி சூரிய நாராயண மூர்த்தி இந்த பரிசினை வழங்கி பெருமைப்படுத்தினார்கள். இந்த நிகழ்வில் உள்துறை அமைச்சர் மாண்புமிகு அமித்ஷா, மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டார்கள். மாணவி நம்பி நாச்சியாருடைய தந்தை சு.இராமசாமி திருநெல்வேலி வி. எம்.சத்திரம் தமிழ்நாடு மின்வாரியத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். தாய் கோமா.