களக்காட்டில் எஸ்டிபிஐ கட்சியின் நகர செயற்குழு கூட்டம்

City Working Committee meeting of STPI party at Kalakkad

களக்காட்டில் எஸ்டிபிஐ கட்சியின் நகர செயற்குழு கூட்டம்

களக்காட்டில் எஸ்டிபிஐ கட்சியின் நகர செயற்குழு கூட்டம் நகர தலைவர் கமாலுதீன் தலைமையில் இன்று காலை 7.00 மணிக்கு களக்காடு நகர அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் நகர செயலாளர் காஜா முகைதின் வரவேற்புரையாற்றினார். மாவட்ட வர்த்தகர் அணி துணை தலைவர் பீமாஸ் உசேன்,நகர செயற்குழு உறுப்பினர்கள் ஆரிப்பைஜீ , கபீர் , ஷகில், ராம் நாடு பீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொது செயலாளர் களந்தை மீராசா கலந்து கொண்டு பேசினார். இதில் கீழக்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
களக்காடு நகராட்சி உயர்வினை அந்தஸ்தை பெற்றதன் அடிப்படையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஏற்கனவே இருக்கின்றது.அது செயல்படாமலே இருக்கிறது. உடனடியாக அதை திறந்து வைத்து பொதுமக்கள் வசதிகேற்ப மாற்ற வேண்டும் அந்த துறைரீதியான அதிகாரிகளை சந்தித்து நேரிடி மனு கொடுக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. வருகின்ற ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தையொட்டி கொடியேற்றம் நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. 1 முதல் 5 வரை நடத்தப்படும் பள்ளிகளுக்கு குழந்தைகளுக்கு அடிப்படை தேவை வசதிகளை செய்து கொடுக்க பள்ளியின் தலைமையாசிரியரை சந்தித்து பேச வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது இறுதியில் நகர செயற்குழு உறுப்பினர் ரபிக் நன்றியுரையாற்றினார்