இந்திய பொருட்களுக்கு 50% வரி விதித்த அமெரிக்கா.. பின்விளைவுகள் என்ன?
தொழில்கள் மீதான அழுத்தத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தியையும் பாதிக்கும்.
வியட்நாம், பங்களாதேஷ் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளிலிருந்து மலிவான மாற்றுகளை நோக்கித் திரும்பக்கூடும்.

ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு டிரம்ப் 50சதவீதம் வரி விதித்துள்ளார்.
இந்த முடிவு வாகன உதிரிபாகங்கள், ஜவுளி, மருத்துவம் போன்ற துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் எஃகு, ரசாயனம் ஆகிய ஏற்றுமதியும் பாதிக்கப்படும்.
இந்திய தயாரிப்புகள் அமெரிக்க சந்தையில் எப்போதும் இல்லாத அளவுக்கு விலை உயர்ந்ததாக மாறும். இதனால் இந்திய பொருட்களை வாங்குவதை அங்குள்ள நுகர்வோர் தவிர்ப்பார்கள்.
கூடுதல் வரி காரணமாக, இந்தப் பொருட்களுக்கான தேவை குறையும். இது இந்தியாவின் இந்தத் தொழில்கள் மீதான அழுத்தத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தியையும் பாதிக்கும்.
டிரம்பின் இந்த நடவடிக்கை உலகளாவிய விநியோகச் சங்கிலியிலும் மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
அமெரிக்க நிறுவனங்கள் இப்போது இந்தியப் பொருட்களுக்குப் பதிலாக, குறிப்பாக வியட்நாம், பங்களாதேஷ் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளிலிருந்து மலிவான மாற்றுகளை நோக்கித் திரும்பக்கூடும். இது இந்தியாவிற்கு நீண்டகால பொருளாதார சவாலாக மாறும்


Yasmin fathima

