உலகசாதனையை நோக்கி Vera Level Business
Vera Level Business Towards World Record
ஒரு Social Media மூலம் மக்களை, வியாபாரிகளை,தொழில்முனைவோரை ஒருங்கிணைத்து மாபெரும் தொழில் புரட்சியை நிகழ்த்தியிருக்கிறது வேற லெவல் பிஸினஸ் குழு (VLB). Clubhouse என்கிற சோஷியல், கோவிட் பெருந்தொற்று காலகட்டத்தில் தொடங்கிய இவர்கள் இதுவரை 278 நாட்களில், பெரும்பான்மையான தொழில்களுக்கான , தொழில் முனைவோர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்கள். உள்ளூர் வணிகத்தை, VLB நெட்வொர்க்கின் மூலம் உலகளாவிய தளத்திற்கு கொண்டுசென்றிருக்கிறது. VLB Virtual Marathon என்கிற பெயரில் தொடர் தின நிகழ்வுகளையும், VLB Expo என வாரசந்தையை இணையத்தில் மிகச்சிறப்பாய் நிகழ்த்திய இவர்கள் இப்போது மாவட்ட அளவில் கிளஸ்டர் எனும் தொழில்முனைவோருக்கான கூட்டுத்தளத்தை உருவாக்கி இருக்கிறார்கள். மதுரை கிளஸ்டர் 20/03/2022 அன்று தொடங்கப்பட்டது
தங்களது 50 மற்றும்100 வது நாட்களை கோவையில் கொண்டிய இவர்கள் இப்போது மண் மணக்கும் மதுரையில், பெண் சக்தியை கொண்டாடும் வகையில் "அக்னிசிறகுகள்" என்ற விருதுகளை பெண்தொழில் முனைவோருக்கு வழங்கி இருக்கிறார்கள். மதுரை கிளஸ்டர் தொடக்கவிழா, 278வது நாள் விழா, பெண் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் அக்னிசிறகுகள் விழா என முப்பெரும் விழாவை VLB அசோக்குமார், ஜாமி சைஃப், தமிழா கார்த்திக் மற்றும் சரோஜினி என VLB குழு வெற்றிகரமாக நேற்று நடத்தி வைத்தார்கள்.