பாரத மாதா சார்பில் போதை பழக்கத்தால் மனநோயாளியான இளைஞரை மீட்டெடுத்து மறுவாழ்வு அளித்த தருணம்
The moment when Bharat Mata rescued and rehabilitated a mentally ill youth due to drug addiction
கோவை உடையாம்பாளையம் பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் சேவைகளை அறிந்து நம்மை தேடி வந்த செளரிபாளையம் அண்ணா நகர் பகுதியில் வசிக்கும் திரு.முருகன் அவர்கள் தங்கள் அன்பு மகன் திரு.வசந்தகுமார் அவர்கள் மது, கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கத்திற்கு அடிமையாகி உச்ச நிலையான பைத்தியம் (சைக்கோ) பிடித்த நிலையில் உள்ளதால் அவரை எங்களுக்கு தெரிந்த திருப்பூர் அன்னை சத்யா மறுவாழ்வு மையத்தில் 14-04-2023 அன்று சேர்த்து சிகிச்சை அளிக்க பண உதவிகள் இன்றி தவிப்பதாக கூறினார்.அவரது வறுமை சூழ்நிலை அறிந்து அவரது ஒரு மாத மருத்துவ சிகிச்சைக்கு ரூபாய்.5000/- காசோலையாகவும் மற்றும் அவரை வீட்டிலிருந்து மறுவாழ்வு மையத்தில் கொண்டு போய் சேர்க்கும் வண்டி வாகன செலவு ரூபாய் 3000/- பணமாகவும் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் M.கெளரி சங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் வழங்கியதுடன் நேரடியாக உடன் அழைத்து சென்று மறுவாழ்வு மையத்தில் சேர்த்து வைத்தார்கள்.
மூர்க்க நிலையில் உள்ள இளைஞரை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கும் இந்த நிகழ்விற்கு உடலுதவி செய்து உதவிய உடையாம்பாளையம் ஜெமினி பாய்ஸ்- மூர்த்தி நண்பர்கள் அனைவருக்கும் பாரத மாதாவின் நெஞ்சார்ந்த நன்றி மலர்களை தெரிவித்துக்கொள்கின்றோம்
போதை பழக்கத்தில் இருந்து வசந்தகுமார் மீண்டு மறுவாழ்வு பெற்று வர இறைவனை உங்களுடன் இணைந்து நாங்களும் பிரார்த்திக்கின்றோம்