பாரத மாதா கொண்டாடி மகிழ்ந்த தமிழ் புத்தாண்டு விழா
Tamil New Year festival celebrated by Bharat Mata
கோவை உடையாம்பாளையம் பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் சார்பில் தமிழ் புத்தாண்டு விழா (14-04-2023) வடவள்ளியில் உள்ள கோகுலம் சேவாஸ்ரமம் இல்லத்தில் நடைபெற்றது.விழாவில் குழந்தைகளுக்கு 11- வகையான பழங்கள் - இனிப்புகள் வைத்து படையலிட்டு குழந்தைகளை அதிகாலையில் பார்வையிட வைத்தும் - அனைத்து
குழந்தைகளுக்கும் கைநீட்டம் எனும் புத்தாண்டு 20-ரூபாய் புது நோட்டுகள்
வழங்கப்பட்டது.மேலும் அனைவருக்கும் அறுசுவை உணவை வழங்கி கொண்டாடி மகிழ்ந்தோம்.இந்நிகழ்வில் நிர்வாகிகள் M.கெளரி சங்கர், ஷ்யாம்,மெய்யப்பன்,பாரதி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
உறவுகளை இழந்த உள்ளங்களுக்கு உறவாய் இருந்து கொண்டாடி மகிழ்ந்தோம் பாரத மாதாவின் தமிழ் புத்தாண்டு