குடியரசு தின அலங்கார ஊர்தி தமிழகத்தில் காட்சிப்படுத்தப்படும்: மு.க ஸ்டாலின் அறிவிப்பு

Republic Day decorative vehicle to be displayed in Tamil Nadu: MK Stalin's announcement

குடியரசு தின அலங்கார ஊர்தி தமிழகத்தில் காட்சிப்படுத்தப்படும்:  மு.க ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை,

குடியரசு தின விழாவை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் நடைபெறும் அணிவகுப்பில் தமிழகத்தின் அலங்கார ஊர்தி பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை.

தமிழ்நாட்டிலிருந்து நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வ.உ.சி., மகாகவி பாரதியார், இராணி வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் ஆகிய விடுதலைப் போராட்ட வீரர்களின் உருவங்கள் அடங்கிய ஊர்தி இடம்பெறுவது மறுக்கப்பட்டு இருப்பது ஏமாற்றம் அளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதினார். தமிழக ஊர்தி இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதுதொடர்பாக விளக்கம் அளித்த மத்திய அரசு, எந்தெந்த மாநிலங்களின் ஊர்திகள் பங்கேற்க வேண்டும் என்பதை மத்திய அரசு முடிவு செய்வதில்லை, நிபுணர் குழுதான் முடிவு செய்தது எனக்கூறி அனுமதி மறுக்கப்பட்டது.

இந்த நிலையில், டெல்லி குடியரசு தினவிழாவில் நிராகரிக்கப்பட்ட ஊர்தி தமிழகத்தில் காட்சிப் படுத்தப்படும் என்று முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.