கோயமுத்தூர் குரு தேவன் சமாஜம் 7 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் ஓணம் கொண்டாட்டம்..!

கோயமுத்தூர் குரு தேவன் சமாஜம் 7 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் ஓணம் கொண்டாட்டம்..!
தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் நல்லறம் அறக்கட்டளை தலைவர் எஸ்.பி. அன்பரசன் ஆகியோர் பங்கேற்பு...!

கோவை

கோயம்புத்தூர் குருதேவன் சமாஜம் சார்பில் வருடம் வருடம் ஆண்டு விழா மற்றும் ஓணம் கொண்டாடப்படுவது வழக்கம். 
அந்த வகையில் இந்த ஆண்டு செப்டம்பர் 6-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை  சிறுவாணி மெயின் ரோட்டில் அமைந்துள்ள தென்கரை வின்ஸ்டார் கார்டனில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழா சமாஜத்தின் தலைவர் அனீஸ் குமார் (எ) கீர்த்தி தலைமையில் நடைபெற்றது.தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் நல்லறம் அறக்கட்டளை தலைவர் எஸ்.பி. அன்பரசன் ஆகியோர் பங்கேற்றனர்.

தமிழ்நாடு இழுவா தியா  பேரமைப்பின் தலைவர் செந்தாமரை, குருதேவன் சொசைட்டி பேரமைப்பின் தலைவர் சசி, நாராயணன் மிஷன் ஹையர் செகண்டரி பள்ளியின் துணைத் தலைவர் முருகானந்தம் உட்பட பலர் சிறப்பு விருந்தினர்களாக  கலந்து கொண்டனர்.
விழாவன்று காலை சிறப்பு பிரார்த்தனையுடன், பூ கோல போட்டி, சிறுவர் முதல் பெரியோர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் உட்பட  பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு  சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.

மேலும் ஓணம் சிறப்பான ஓணம் சத்யா சிறப்பு அறுசுவை விருந்து அனைவருக்கும் வழங்கப்பட்டது. மாலை 6 மணி முதல் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த விழாவில் கூட்டத்தில் செயலாளர் நாராயணன் குட்டி, பொருளாளர் கண்ணப்பன், வி.ஆர்.ரமேஷ்குமார், பிரகாஷ்,பரமேஸ்வரன், அணில்தாஸ், பிரேம் சந்த், சுரேஷ், ரோஷினி,சொர்ணம், ஜோதி மற்றும் சங்க உறுப்பினர்கள்  ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.