சின்னியம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய அமைப்புச் செவிலியருக்கு சிறந்த சேவையாளர் விருது

சின்னியம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய அமைப்புச் செவிலியருக்கு சிறந்த சேவையாளர் விருது

சின்னியம்பாளையம்: சின்னியம்பாளையம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் (நலவாழ்வு மையம்) மூலம், பொதுமக்களின் நலனுக்காக சிறப்பான மருத்துவ சேவையாற்றி வரும் அமைப்புச் செவிலியர் திருமதி த. விஜயலஷ்மி தர்மராஜ் அவர்களுக்கு “சிறந்த சேவையாளர்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

குறிப்பாக கொரோனா பெருந்தொற்று காலத்தில் பொதுமக்களின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அவரது சேவை குறிப்பிடத்தக்கதாகும். தொடர்ந்து மக்களுக்கு மருத்துவ விழிப்புணர்வு மற்றும் சுகாதார சேவைகளை வழங்கி வரும் அவரது பணியைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின அரசு விழாவில், மாவட்ட ஆட்சியர் அவர்களின் திருக்கரங்களால் திருமதி த. விஜயலஷ்மி தர்மராஜ் அவர்களுக்கு சிறந்த சேவையாளருக்கான விருது வழங்கப்பட்டது.

இந்த பாராட்டுக்குரிய சாதனைக்கு சின்னியம்பாளையம் மற்றும் மயிலம்பட்டி ஊராட்சி பொதுமக்கள் சார்பில் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டன.

மக்கள் நலனுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு கிடைக்கும் இத்தகைய அங்கீகாரம், அவர்களின் சேவைக்கு மேலும் ஊக்கமளிக்கும் வகையில் அமைந்துள்ளது.