உலக சாதனை முயற்சிக்காக 2 நாளில் 25 லட்சம் விதைப்பந்து தயாரிக்கும் பணி

உலக சாதனை முயற்சிக்காக 2 நாளில் 25 லட்சம் விதைப்பந்து தயாரிக்கும் பணி

ருதும்பரா பவுண்டேஷன், தியாகி என்.ஜி.ராமசாமி நினைவு மேல்நிலைப்பள்ளி, லயன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்தூர் இன்டெகிரிட்டி, ரோட்டரி கிளப், ஆத்மா அறக்கட்டளை, Y' s men club , 96 வருட முன்னாள் மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து நடத்திய மாபெரும் விதைப்பந்து திருவிழா தியாகி என்.ஜி.ராமசாமி நினைவு மேல்நிலைப்பள்ளியில் இரண்டு நாட்கள் நடைபெற்றது.

உலக சாதனை முயற்சிக்காக 3 ஆயிரத்து 60 மாணவர்கள் 2 நாளில் 25 லட்சம் விதைப்பந்து தயாரித்தனர்.  கோவையை சோலையாக்கும் வகையிலும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும் மேற்கு தொடர்ச்சி மலையிலும், கோவையில் வனப்பகுதியிலும், குளம், குட்டைகளிலும் விதைப்பந்து வீசப்பட உள்ளது. இதில் நாட்டு மரங்களின் விதைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மாபெரும் விதைப்பந்து திருவிழா  சிறப்பாக நடைபெற்று முடிந்தது.. விதைப்பந்து தயாரித்த மாணவர்களுக்கு கண்களுக்கு விருந்து அளித்தது போல் நல்லதொரு கும்மிய ஆட்டத்தை காண்பித்து மகிழ்வித்து அனைவருக்கும் உணவு அளித்து திருப்தியாக அனுப்பினர்