வண்ண விழுதுகள் பெண்கள் சங்கமம் மற்றும் விருது வழங்கும் விழா
வண்ண விழுதுகள்
திருநெல்வேலி ரோஸ் மேரி கல்லூரியில் ஜே சி ஐ கன்னியாகுமரி பயோனியரின் வண்ண விழுதுகள் பெண்கள் சங்கமம் மற்றும் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தவப்புதல்வி அமைப்பின் நிறுவனர் மற்றும் ஜே சி ஐ கன்னியாகுமரி பயோனியரின் தலைவர் முனைவர் சுபத்ரா செல்லத்துரை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் வெளியப்பன் மற்றும் ஜே சி ஐ மண்டலம் பதினெட்டின் துணை தலைவர் வின்சென்ட் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக பங்குபெற்றனர்.
இந்நிகழ்வின் முக்கிய அங்கமாக கிராமப்புற தையர் கலைஞர்களை கொண்டு 20 நாட்களில் 2024 வண்ணமயமான மேலங்கி தயாரித்து கல்லூரி மாணவிகள் பெருமளவில் பங்குபெற்று காட்சி படுத்திய உலக சாதனை நிகழ்வில் பங்குபெற்ற ரோஸ் மேரி கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகளுக்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. கல்லூரியிலிருந்து பெருமளவு மாணவிகளை பங்குபெற ஊக்குவித்த கல்லூரிக்கும், கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜெனிதா ராணி அவர்களுக்கும், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் செல்வராணி அவர்களுக்கும் தவப்புதல்வி அமைப்பின் நிறுவனர் முனைவர் சுபத்ரா செல்லத்துரை விருது மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.
சூரியன் பண்பலையின் மூத்த அறிவிப்பாளர் விஜி பூரணசிங் மாணவிகளுக்கு சொல் விளையாட்டு போட்டி நடத்தினார். தமிழா அகாதெமியின் நிறுவனர் தன் பயிற்சியாளர்களுடன் விருது நிகழ்வில் பங்கு பெற்று 800 மாணவிகளுக்கு ஒரே நாளில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி வழங்கிய பெருமைக்கு உலக சாதனை சான்றிதழ் பெற்றார். நிகழ்வில் தொடக்கத்தில் தொழில்முனைவு மேம்பாட்டு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஏஞ்சல் டயானா அவர்களின் ஒருங்கிணைப்பில் மாணவிகள் விற்பனை அங்காடிகள் மற்றும் காட்சிப்படுத்துதல் திறந்து வைக்கப்பட்டது. 40 க்கும் மேற்பட்ட மாணவிகள் உணவு , அழகு சாதன பொருட்கள், துணிகள், கைவினை பொருட்கள் போன்ற அங்காடிகள் வைத்திருந்தனர். இதனை தொடர்ந்து கல்லூரி முதல்வர் முனைவர் ஜெனிதா ராணி மாணவிகளையும் அவர்கள் பங்குபெற்ற நிகழ்வின் முக்கியத்துவத்தையும் எண்ணி அகமகிழ்ந்து உரையாற்றினார். மாணவிகள் தங்களின் தனித்திறமையை உலகுக்கு அறியச்செய்வதோடு புதுமை படைப்பு, ஆளுமை , பொருளாதார வளர்ச்சி என தங்களை தகுதி படுத்தி வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்தி பேசினார். நிகழ்வில் மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், போட்டிகள் , பரிசுகள் என இடம்பெற்றது குறிப்பிட தக்கது. நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை ஜே சி ஐ கன்னியாகுமரி பயோனியரின் தலைவர் முனைவர் சுபத்ரா செல்லத்துரை, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் செல்வராணி மற்றும் தொழில்முனைவு மேம்பாட்டு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஏஞ்சல் டயானா இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.