75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம்

Special medical camp on the occasion of 75th Independence Day celebrations

75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு  சிறப்பு மருத்துவ முகாம்

75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 14.08.2022 அன்று தக்கலை, பணவிளை சிஎஸ்ஐ ஆலய வளாகத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இம்முகாமிற்கு திருவிதாங்கோடு பேரூராட்சியின் நான்காவது வார்டு கவுன்சிலர்  டாக்டர். எஸ் ஜெயா ஸ்ரீதரன் அவர்கள் தலைமை தாங்கினார்.

பனவிளை ஆலய பாஸ்டர். டென்னிஸ் அவர்கள் முன்னிலை வகித்து முகாமினை துவக்கி வைத்தார்கள்.  மருத்துவ முகாமிற்கு நாகர்கோயில் வில்லியம் மருத்துவமனையின் மகப்பேறு மற்றும் பொதுநல மருத்துவர்  டாக்டர் சூசன் வில்லியம் அவர்களும்  மருத்துவர் அபிலாஷா  அவர்கள் குழுவும் இலவச மகளிர் நல விழிப்புணர்வு, சர்க்கரை, ரத்த அழுத்த பரிசோதனை,

மருந்து மற்றும் ஆலோசனைகள் வழங்கினார்கள்.  இந்நிகழ்வினை தவப்புதல்வி நீயே உன்னால் உனக்காக அறக்கட்டளையின் தலைவி முனைவர் சுபத்ரா செல்லத்துரை அவர்கள் ஒருங்கிணைத்து நடத்தினார்.