உ.பி.யில் காவல் நிலையத்தை காக்கும் லங்கூர் குரங்கு: ஆய்வாளர் மேசையில் அமர்ந்து பழங்களை உண்ணும் காட்சி வைரல்

உ.பி.யில் காவல் நிலையத்தை காக்கும் லங்கூர் குரங்கு: ஆய்வாளர் மேசையில் அமர்ந்து பழங்களை உண்ணும் காட்சி வைரல்
உ.பி.யில் காவல் நிலையத்தை காக்கும் லங்கூர் குரங்கு: ஆய்வாளர் மேசையில் அமர்ந்து பழங்களை உண்ணும் காட்சி வைரல்

புதுடெல்லி: உ.பி.​யின் பெரும்​பாலான மாவட்​டங்​களில் குரங்​கு​கள் தொல்லை என்​பது சாதா​ரண​மாக உள்​ளது. பிலிபித்​தின் பில்​சந்தா காவல் நிலை​யத்​தி​லும் குரங்​கு​களின் இது​போன்ற தொல்லை அதி​கரித்​துள்​ளது.

இதனை சமாளிக்க பில்​சந்தா போலீ​ஸார் ஒரு புதிய உத்​தியை கடைபிடித்து வரு​கின்​றனர். இவர்​கள் லங்​கூர் எனப்​படும் கருங்​குரங்கை காவல் நிலை​யத்​தில் கட்டி வைத்​துள்​ளனர். லங்​கூர் குரங்கை பார்த்து சிவப்பு முகக் குரங்​கு​கள் அச்​சப்​படும் என்​ப​தால் இவ்​வாறு செய்​துள்​ளனர். இந்​தக் குரங்கு சிலசம​யம் காவல் நிலைய ஆய்​வாளரின் மேசை​யிலும் சொகு​சாக அமர்ந்து பழங்​களை உண்​கிறது. இது தொடர்​பான வீடியோ பதிவு சமூக வலை​தளங்​களில் வைரலாகி வரு​கிறது.

இதுகுறித்து பில்​சந்தா காவல் நிலைய உதவி ஆய்​வாளர் சித்​தாந்த் சர்மா கூறும்​போது, ‘‘இந்த குரங்​கு​களால் காவலர்​களின் தொப்​பிகள், முக்​கிய கோப்​பு​களை இழந்​துள்​ளோம். சிலசம​யம் நாங்​கள் சீருடைகளை மாற்​றவதற்​காக கழட்டி வைத்​தால் அதை​யும் குரங்​கு​கள் வெளியே எடுத்​துச்​சென்று வீசி விடு​கின்​றன. வேறிவழி​யின்றி குரங்​கு​கள் பார்த்து அச்​சப்​படும் லங்​கூர் குரங்கை பாது​காப்​புக்கு வைத்​துள்​ளோம். இரண்டு வருடங்​களுக்கு முன் லங்​கூர் உரு​வத்​தில் ஒரு கட்​-அவுட் வைத்​தோம். ஆனால் அதைக்​கண்டு குரங்​கு​கள் அஞ்​சுவ​தில்லை என்​ப​தால் அசல் குரங்​கையே காவலுக்கு வைத்​துள்​ளோம்’’ என்​றார்.

தற்​போது பிலிபித் மாவட்​டத்​தின் மற்ற காவல் நிலைய போலீ​ஸாரும் லங்​கூர் குரங்கை தேடி வரு​கின்​றனர். இவற்றை செல்​லப்​பி​ராணி​யாக வளர்ப்​பவர்​களுக்கு வாடகைத் தொகை அளிக்க வேண்​டும் என்​ப​தால் இதற்​காக ஒரு பட்​ஜெட் ஒதுக்​கும்​படி உயர் அதி​காரி​களுக்கு கடிதம் எழு​தி​யுள்​ளனர். இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்​டிடம் உ.பி.​யின் கோண்டா வனவட்​டத்​தின் வன அதி​காரி தமிழர் செம்​மாறன் கூறுகை​யில், ‘‘உ.பி.​யில் குரங்​கு​களின் எண்​ணிக்​கைகள் அதி​கரித்து விட்​ட​தால் தொல்​லைகளும் கூடி விட்​டன. இதை சமாளிக்க பொது​மக்​கள் எடுக்​கும் நடவடிக்​கைகளும் அதி​கரித்​துள்​ளன. வனவிலங்கு பாது​காப்பு சட்​டம் 1972-ல் திருத்​தம் செய்து அதன் பாது​காப்பு பட்​டியலில் 2023 ஏப்​. 1 முதல்​ குரங்​கு​கள்​ நீக்​கப்​பட்​டு விட்​டன’’ என்​றார்​.