கருணாநிதி நினைவுநாள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி

கருணாநிதி நினைவுநாள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி
ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து கலைஞர் நினைவிடம் நோக்கி சென்ற அமைதி பேரணியில் ஆயிரக்கணக்கான தி.மு.க. தொண்டர்கள் பங்கேற்றனர்.

கருணாநிதி உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து கலைஞர் நினைவிடம் நோக்கி சென்ற அமைதி பேரணியில் ஆயிரக்கணக்கான தி.மு.க. தொண்டர்கள் பங்கேற்றனர்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அண்ணாசாலையில் உள்ள அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து எம்.பி.க்கள், அமைச்சர்கள் கலைஞர் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கலைஞர் கருணாநிதி நினைவிடம் வரை அமைதி பேரணி தொடங்கியது.

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடம் நோக்கி சென்ற அமைதி பேரணியில் தி.மு.க. எம்.பி.க்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள், ஆயிரக்கணக்கான தி.மு.க. தொண்டர்கள் பங்கேற்றனர்.