தவபுதல்வி அமைப்பு சார்பில் சர்வேதேச பெண்கள் தின கொண்டாட்டம் மற்றும் வீரமங்கை வேலுநாச்சியார் விருது வழங்கும் விழா:

International Women's Day Celebration and Veeramangai Velunacharya Award Ceremony on behalf of Thavaputhalvi Organization

தவபுதல்வி அமைப்பு சார்பில் சர்வேதேச பெண்கள் தின கொண்டாட்டம் மற்றும் வீரமங்கை வேலுநாச்சியார் விருது வழங்கும் விழா:

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இராணி வீரமங்கை வேலுநாச்சியாரின் வரலாற்று சிறப்பு மிக்க சிவகங்கை மாவட்டத்தில் 
வீர மங்கை, வெற்றி மங்கை, சாதனை மங்கையர்களின்  சங்கமம் எனும் நிகழ்வு தவபுதல்வி நீயே உன்னால் உனக்காக அறக்கட்டளை சார்பாக நடத்தப்பட்டது.

மேதகு ராணி சாஹிபா கௌரி வல்லப டி. எஸ். கே. மதுராந்தகி நாச்சியார், சிவகங்கை சமஸ்தானம் அவர்களின் நல்லாசியுடன் செல்வி . யுகா நாச்சியார்  வீர மங்கை வேலு நாச்சியார் வேடமிட்டு தவ புதல்வி அமைப்பின் நிறுவன தலைவியுடன் இணைந்து  தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதியில் இருந்து சாதனைகள் புரிந்தும் சேவை பணிகளை திறம்பட  செய்தும் வருகின்ற 23 பெண்களை தேர்வு செய்து  வீர மங்கை வேலு நாச்சியார் பெயரில் விருது வழங்கி சிறப்பிக்கப் பட்டது 

நிகழ்ச்சியில் 
முனைவர். சுபத்ரா செல்லத்துரை அவர்கள் தலைமை உரையும், 
ஸ்ரீமதி. விஜி பூரண்சிங்
அவர்கள் சிறப்புரையும் 
ஆற்றினார்கள், 
 
பாரதி இசை கல்வி கழகம் சார்பாக பரதம்,   அக்க்ஷயா  அகாடமி சார்பாக சிலம்பம்,
மதுரை கூடல் கலைக்கூடம்  குழுவினர் சார்பாக கிராமிய கலைகளும் அரங்கேறியது.

இதய மகளிர் கல்லூரி மாணவிகள் நடனம் மற்றும் வீர மங்கை வேலுநாச்சியார் பற்றிய உரை ஆற்றினார்கள்.

கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றியவர்களுக்கு பாராட்டு சான்றிதழும் நினைவு பரிசும் வழங்கப்பட்டது.

பங்கேர்ப்பாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு சுவாரசியமான கேள்விகள் கேட்டு பரிசுகளும் வழங்கப்பட்டது.

விழாவின் ஏற்பாடுகளை தவபுதல்வி அமைப்பு மற்றும் நீயே உன்னால் உனக்காக அறக்கட்டளையின் நிறுவன தலைவி முனைவர். சுபத்ரா செல்லத்துரை அவர்கள் சிறப்பாக செய்திருந்தார்கள்.