போஸ்ட் ஆபீஸ் இல் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
Post Office இல் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
போஸ்ட் ஆபீஸ் தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் ஏடிஎம் கார்டு பிளாக், புதிய ஏடிஎம் கார்டுகளை வழங்குதல் ஆகிய முக்கியமான தகவல்களை IVR கட்டணமில்லா எண்ணைப் பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கிய அறிவிப்பு:
கோவிட்-19 பெருந்தொற்று பரவலுக்கு பின்னர் அதிகமான நிதி நெருக்கடியை பொதுமக்கள் சந்தித்தனர். இதனால் சேமிப்பின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்த மக்கள் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர். இருப்பினும் வங்கிகளை விட போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்கு முக்கியமான காரணம் வங்கிகளில் சேமிப்பு கணக்கு, FD திட்டங்களுக்கு தரும் வட்டியை விட போஸ்ட் ஆபீஸில் நல்ல வட்டி விகிதத்தை கொடுத்து வருகிறது.
போஸ்ட் ஆபீஸ் திட்டங்களில் வரிச்சலுகையும் அளிக்கப்பட்டு வருகிறது. அஞ்சல் நிலைய சேமிப்புக் கணக்கை ஆன்லைனில் தொடங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் போஸ்ட் ஆபீஸ் வாடிக்கையாளர்கள் சேவையை மேம்படுத்த சமீபத்தில் IVR வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் சில முக்கியமான தகவல்களை வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்தபடியே தொலைபேசி மூலம் தெரிந்து கொள்ளலாம்.
போஸ்ட் ஆபீசில் பிபிஎஃப், சுகன்யா சம்ரிதி யோஜனா, என் எஸ் சி மற்றும் பிற சிறுசேமிப்பு திட்டங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் முதலீட்டில் பெறப்பட்ட வட்டி, ஏடிஎம் கார்டு பிளாக் மற்றும் புதிய ஏடிஎம் கார்டுகளை வழங்குதல் போன்ற முக்கியமான தகவல்களை IVR கட்டணமில்லா எண்ணை 1800 2666868 பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம். இந்த வகையில் போஸ்ட் ஆபீஸில் பதிவு செய்த தொலைபேசி எண்ணை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த வசதி பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.