உத்தரகண்ட் தேர்தல்: பாஜக நட்சத்திரப் பிரசாரப் பட்டியல் வெளியீடு
Uttarakhand Election: BJP Star Campaign List Released
டேஹ்ராடூன்: உத்தரகண்ட் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பிரதமர் மோடி, ஜே.பி. நட்டா, அமித் ஷா உள்ளிட்ட 30 பேர் அடங்கிய நட்சத்திரப் பிரசாரப் பேச்சாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
இந்த 30 பேர் கொண்ட பட்டியலில், பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, பிரகலாத் ஜோஷி, ஸ்மிருதி இரானி உள்ளிட்டோரின் பெயர்களும் அடங்கும்.
உத்தரகண்டில் பேரவைத் தேர்தல் பிப்ரவரி 14ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ஆம் தேதி நடைபெற உள்ளது.