கேரள மான்சூன் லாட்டரியில் ரூ.10 கோடி.. அதிக டிக்கெட் விற்ற இடம் இது தான்.. யாருக்கு அடிக்க போகுதோ..

கேரள மான்சூன் லாட்டரியில் ரூ.10 கோடி.. அதிக டிக்கெட் விற்ற இடம் இது தான்.. யாருக்கு அடிக்க போகுதோ..
10 கோடி முதல் பரிசு கொண்ட, கேரளா மான்சூன் லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் வரும் 23 ஆம் தேதி திருவனந்தபுரம் லாட்டரி தலைமை

திருவனந்தபுரம்: ரூ.10 கோடி முதல் பரிசு கொண்ட, கேரளா மான்சூன் லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் வரும் 23 ஆம் தேதி திருவனந்தபுரம் லாட்டரி தலைமை அலுவலுவலகத்தில் நடைபெறுகிறது. குலுக்கலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், பாலக்காடில் மட்டும் 7,56,720 டிக்கெட்டுகள் விற்றுள்ளன. மொத்தம் 34 லட்சம் டிக்கெட்டுகள் அச்சிடப்பட்டுள்ள நிலையில், நேற்றைய நிலவரப்படி 31 லட்சம் டிக்கெட்டுகள் விற்றுவிட்டதாம்.

லாட்டரி டிக்கெட்டுகளால் பலரும் தாங்கள் சேமித்த பணத்தை இழந்து வெறுங்கையுடன் திரும்பியதால் தமிழகத்தில் லாட்டரிக்கு தடை செய்யப்பட்டது. எனினும், இந்தியாவில் பஞ்சாப், மகாராஷ்டிரா, அருணாசலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனைக்கு அனுமதி உள்ளது...

கேரளா லாட்டரி டிக்கெட்

குறிப்பாக கேரளாவில் விற்பனை செய்யப்படும் லாட்டரி சீட்டுகள் அங்குள்ள மக்கள் மத்தியில் மிகப்பிரபலமாக உள்ளது. மாநில அரசே லாட்டரி விற்பனையை நடத்தி வருகிறது. இந்த லாட்டரி டிக்கெட்டின் மூலம் பெருமளவு வருவாய் அந்த மாநில அரசுக்கு கிடைக்கிறது. கேரளாவில் தினசரி லாட்டரி குலுக்கல் போக வருடத்திற்கு ஆறு பம்பர் லாட்டரி குலுக்கலும் நடைபெறுகிறது...

சீசனுக்கு தகுந்தபடி பம்பர் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, ஓணம் பண்டிகை சமயத்தில் விடப்படும் லாட்டரிக்கு ரூ.25 கோடி பரிசாக அளிக்கப்படுகிற்து. அதுபோக கிறிஸ்துமஸ் நியூ இயர் லாட்டரிக்கு ரூ.20 கோடி பரிசு அளிக்கப்படும். அந்தவகையில் தற்போது மான்சூன் டிக்கெட் பம்பர் சேல்ஸ் நடைபெற்று வருகிறது.

ரூ.10 கோடி முதல் பரிசு

கேரளா மான்சூன் லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் வரும் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. திருவனந்தபுரம் லாட்டரி தலைமை அலுவலுவலகத்தில் பிற்பகல் 2 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த டிக்கெட்டிற்கு முதல் பரிசாக ரூ.10 கோடி அளிக்கப்படுகிறது. பம்பர் குலுக்கலுக்கு இன்னும் ஒரு சில நாட்களே இருப்பதால் விற்பனை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 34 லட்சம் டிக்கெட்டுகள் அச்சிடப்பட்டுள்ள நிலையில் 31 லட்சம் டிக்கெட்டுகள் நேற்றைய நிலவரப்படி விற்று தீர்ந்துவிட்டன

பாலக்காடு மாவட்டத்தில் அதிகம்

மீதமுள்ள டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விடும் என்று கேரள லாட்டரி பிரியர்கள் நம்பிக்கை தெரிவித்த்தனர். பாலக்காடில் மட்டும் 7,56,720 டிக்கெட்டுகள் விற்றுள்ளன. திருவனந்தபுரத்தில் 3,74,660 டிக்கெடுகளும், திரிச்சூரில் 3 லட்சத்து 35 ஆயிரத்து 980 டிக்கெட்டுகளும் விற்றுள்ளன. கேரள லாட்டரி டிக்கெட்டுகள் எப்போதும் பாலக்காடு மாவட்டத்தில்தான் அதிக அளவு விற்பனையாகும்.

அந்த வகையில் தற்போதைய மான்சூன் பம்பர் லாட்டரி டிக்கெட்டும் பாலக்காடில்தான் அதிக சேல்ஸ் நடைபெற்றுள்ளது. தமிழகத்தின் கோவை மாவட்ட எல்லையை ஒட்டி பாலக்காடு அமைந்துள்ளது. இந்த டிக்கெட்டிற்கான குலுக்கல் வரும் புதன்கிழமை நடைபெற உள்ள நிலையில், பரிசு அடிக்கும் அதிர்ஷ்டசாலி நாமாக இருந்துவிட மாட்டோமா என்ற ஆர்வத்தில் கேரள சேட்டன்களும் லாட்டரி பிரியர்களும் ஆசையில் காலண்டரையே பார்த்துகொண்டு இருக்கிறார்கள..

சம்ருதி லாட்டரி லாட்டரி குலுக்கல்

கேரளாவில் இன்று சம்ருதி லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் நடைபெற்றது. இந்த டிக்கெட்டிற்கான முதல் பரிசு ரூ.1 கோடியாகும். MR 184440 என்ற எண்ணிற்கு முதல் பரிசு அடித்துள்ளது. இந்த டிக்கெட் ஆலப்புழாவில் விற்பனை (ALAPPUZHA) செய்யப்பட்டது ஆகும். தன்கம்மா என்ற ஏஜென்சியிடம் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டுள்ளது...