குமரி மாவட்டத்தில் “பனை வனம்”
Palm forest in Kumari district
தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியம் முன்னெடுக்கும் ஒரு கோடி பனை விதைகள் நடும் நெடும் பணி வரும் செப்டம்பர் மாதம் 24 தேதி நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு வரும் தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் ஆ.நாராயணன் அவர்களுடன் குமரி மாவட்டத்தில் பனை விதைகள் நடுவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இதில் தவப்புதல்வி நிறுவனர் முனைவர் சுபத்ரா செல்லத்துரை, தேசிய பசுமை படையின் குமரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜோ பிரகாஷ், நீயே உன்னால் உனக்காக அறக்கட்டளை திறன் மேம்பாட்டு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ராமலட்சுமி, எழுத்தாளர் பச்சைமால் கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர். முதற்கட்டமாக நல வாரிய தலைவரின் ஆலோசனை படி கடந்த மாதம் குமரி மாவட்டத்தில் ஒரு லட்ச பனை விதைகள் தொடக்க விழா புனித ஜான்ஸ் கல்லூரியுடன் இணைந்து குமரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் தலைமையில் கடலோர பகுதிகளில் பனை விதைகள் நடும் பணி தொடங்கிய நிலையில் தொடர்ந்து கடலோர பகுதிகளில் பனை விதைகளை கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டத்தோடு இணைந்து பனை விதைகள் நடும் நெடும் பணி தொடரும் எனவும் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களுடன் குமரி மாவட்ட பசுமை படையும் இணைந்து 'குமரி மாவட்டத்தில் பனை வனம்' என்ற திட்டத்தை முன்னெடுக்கும் எனவும் முடிவு செய்யப்பட்டது. மேலும் பனை குறித்த விழிப்புணர்வும் இளைய சமுதாயத்திற்கு பனை பற்றிய தகவல்களும் கொண்டு சேர்க்கும் பொருட்டு "பனையும் தமிழர் வாழ்வியலும்" எனும் தலைப்பில் பாட திட்டமாக கொண்டு வரவும் அதற்கான புத்தகத்தை தமிழக அரசின் அனுமதியோடு பல்கலை கழகத்தின் திறன் மேம்பாடு பட்டியலின் கீழ் ஒரு பாடமாக அறிமுகம் செய்ய பரிந்துரைக்க தவப்புதல்வி நிறுவனர் பேராசிரியர் முனைவர் சுபத்ரா செல்லத்துரை கேட்டுக்கொண்டார். இவ்வாலோசனை கூட்டத்தில் நல வாரிய தலைவரின் உதவியாளர்கள் டேவிட் ஜெபராஜ், குமரன், வழக்கறிஞர் கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.