பாரத மாதா வழங்கி உதவிய மருத்துவ நிதியுதவி
பாரத மாதா வழங்கி உதவிய மருத்துவ நிதியுதவி
கோவை உடையாம்பாளையம் பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் சார்பில் தஞ்சாவூர் மாவட்டம் - அய்யநல்லூர் பகுதியைச் சார்ந்த அன்பு சகோதரி திருமதி.சரிதா-சீதாலட்சுமி அவர்கள் தங்கள் சகோதரியின் (தாய்- தந்தை இருவரும் இல்லை) மகளை வளர்ப்பு மகளாக வளர்த்து வரும் மழலைச் செல்வம் செல்வி.
வசந்த பிரியா(வயது-7) அவர்களின் இருதய அறுவை சிகிச்சைக்காக கோவை G.K . குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதை அறிந்தும்- அவரது ஏழ்மை நிலை கருதியும் அவரது மருத்துவ சிகிச்சைகளுக்காக ரூபாய்.5000/- காசோலையாக வழங்கியும்
(01-04-2023), அறுவை சிகிச்சைக்கு தேவையான O+ve இரத்த வகை இரத்தம் வழங்கியும், புத்தாடைகள் வழங்கியும் அவரது அறுவை சிகிச்சை முடித்து நல்ல முறையில் மருத்துவ மனையில் இருந்து குழந்தை வசந்தபிரியா மற்றும் பெற்றோரையும் அவர்களது கோவையில் உள்ள உறவினர் வீட்டில் சேர்த்தது பாரத மாதா நற்பணி அறக்கட்டளை .இந்நிகழ்வில் நிர்வாகிகள் M.கெளரி சங்கர், M.கார்த்திக், K.இளங்கோ, மெய்யரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
குழந்தையின் அறுசுவை சிகிச்சைக்கு உதவிய அனைத்து நல்உள்ளங்களுக்கும் பாரத மாதாவின் நெஞ்சார்ந்த நன்றி மலர்களை தெரிவித்துக்கொள்கின்றோம்