சென்னை தாறுமாறாக ஓடிய சொகுசு கார், ஒருவர் பலி 4 கார்கள் சேதம்.
Luxury car rammed, one killed, 4 cars damaged.
கீழக்கரையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வில் பங்கேற்ற பெண்களிடம் தாலியை கழற்ற கூறியதால் வேதனையடைந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் தனியார் கல்லுாரியில் முதுகலை பட்டதாரி ஆசிரியருக்கான தகுதி தேர்வு ஆன்லைனில் பிப்., 12 முதல் பிப்.20- வரை நடக்கிறது. நேற்று தேர்வுக்கு சென்ற திருமணமான பெண்கள் தாலி, மெட்டியை கழற்றி விட்டு தேர்வு மையத்துக்குச் செல்ல வேண்டும் என தேர்வு மைய கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.இதனால் பெண்கள் வேதனையடைந்துள்ளனர்.
இதில் சில பெண்களுக்கும் கண்காணிப்பாளருக்கும் வாக்குவாதம் நடந்துள்ளது. தங்கள் எதிர்காலம் பாதிக்கப்படும் என கருதி வேறு வழியின்றி பெண்கள் தாலியை கழற்றி வைத்து விட்டு தேர்வு மையத்திற்குள் சென்றுள்ளனர். இது குறித்து ஹிந்து முன்னணி ராமநாதபுரம் மாவட்ட பொதுச் செயலாளர் கே.ராமமூர்த்தி கூறியதாவது; பெண்களுக்கு தாலி என்பது மிகவும் புனிதமானது. ஹிந்து பெண்களின் நம்பிக்கையை அவமதிக்கும் வகையில் தமிழர்கள் காலங்காலமாக பின்பற்றி வரும் பாரம்பரியத்தை சிதைக்கும் வகையில் தாலியை கழற்ற கூறிய தேர்வு மைய கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.