கோலிவுட்டில் கணிசமாக குறைந்த பார்ட்டிகள்: ஸ்ரீகாந்த், அமீர், கிருஷ்ணா எதிர்காலம்?

கோலிவுட்டில் கணிசமாக குறைந்த பார்ட்டிகள்: ஸ்ரீகாந்த், அமீர், கிருஷ்ணா எதிர்காலம்?
போதை மருந்து விவகாரத்தில் கைதாகி உள்ளே சென்று வந்ததால் இந்த நிகழ்ச்சி,

மு.மாறன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 'பிளாக்மெயில்' படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார் ரோஜாக்கூட்டம் ஸ்ரீகாந்த். போதை மருந்து விவகாரத்தில் கைதாகி உள்ளே சென்று வந்ததால் இந்த நிகழ்ச்சி, புரமோஷனில் அவர் கலந்து கொள்ளவில்லை. சென்னையில் உள்ள வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் மாதிரி அவரும் படம் ரிலீஸ் ஆக, தனது சம்பளத்தை விட்டுக்கொடுத்து இருக்கிறார். அது பற்றி யாருமே பேசவில்லை. அவருக்கு திரையுலகில் கூட பெரியளவில் ஆதரவு இல்லை. அவருக்கு உதவினால், அவருடன் பேசினால் போதை மருந்து விவகாரத்தில் தங்கள் பெயர் வருமோ என்று பயந்து பலர் ஒதுங்கி இருக்கிறார்களாம். இதேபோல் அமீரும் கையில் இருக்கும் படத்தை முடிக்க முடியாமல், புதுப்படங்களை கமிட் செய்ய முடியாமல் தவிக்கிறாராம். வெப்சீரிஸ் மற்றும் சில படங்களில் நடித்து வரும் 'கழகு' கிருஷ்ணாவின் எதிர்காலமும் இந்த வழக்கால் முடங்கி போய் உள்ளது. இந்த விவகாரத்தால் கோலிவுட்டில் பார்ட்டிகள் நடத்தப்படுவது கணிசமாக குறைந்துள்ளது...