ஊட்டியில் பெண்களை தவறாக வீடியோ எடுத்த ஓட்டல் ஊழியர் கைது

ஊட்டியில் பெண்களை தவறாக வீடியோ எடுத்த ஓட்டல் ஊழியர் கைது
ஊட்டியில் பெண்களை தவறாக வீடியோ எடுத்த ஓட்டல் ஊழியர் கைது

நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு, கேரள மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த 5-ம் தேதி தனது குடும்பத்துடன் சுற்றுலா வந்தார். ஊட்டியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தனர்.

அந்த இளம்பெண் கழிவறையில் இருந்த போது, திடீரென செல்போன் டார்ச் லைட் வெளிச்சம் ஏற்பட்டது. அந்த பெண் பார்த்தபோது, கழிவறையின் அருகில் உள்ள மற்றொரு அறையில் இருந்து சிறிய துளை வழியாக செல்போன் மூலம் மர்மநபர் வீடியோ எடுப்பது தெரியவந்தது. அந்த பெண் உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதன்பேரில் ஊட்டி மேற்கு காவல் ஆய்வாளர் பாலமுருகன், உதவி ஆய்வாளர் செந்தில் தலைமையிலான போலீஸார், அந்த ஓட்டலுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அங்கிருந்தவர்களின் செல்போனை வாங்கி சோதனை செய்தனர்.

அதில், ஓட்டலில் ரூம் பாயாக பணியாற்றிய கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த நித்திஷ் (30) என்பவரின் செல்போனில் 5-க்கும் மேற்பட்ட பெண்களின் வீடியோக்கள் இருந்தன. இதையடுத்து, நித்திஷை போலீஸார் கைது செய்தனர்.