35 ஆண்டுகள் கழித்து தனது 65 வது வயதில் காதலியை கரம்பிடித்த காதலன் முழு விவரம்...
Full details of the boyfriend who grabbed his girlfriend at the age of 65 after 35 years ...
கர்நாடகாவில் 65 வயது முதியவர், தனது இளமைக்கால காதலியை தேடிச் சென்று கரம்பிடித்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் மேலக்கோட்டையை சேர்ந்த 65 வயது முதியவர் சிக்கண்ணா... தன்னுடைய சிறு வயதில் ஜெயம்மா என்பவரை காதலித்துள்ளார். இருவரும் வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு எதிர்ப்பு இருந்ததால் ஜெயம்மா வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்துள்ளார்.
ஜெயம்மாவால் கணவருடன் சரியாக குடும்பம் நடத்த முடியவில்லை. சில ஆண்டுகள் கணவருடன் குடும்பம் நடத்திய ஜெயம்மா, 4 ஆண்டுகளுக்கு பிறகு கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்தார்.ஆனால் ஜெயம்மாவின் காதலன் சிக்கண்ணவோ, திருமணம் எதுவும் செய்யாமல் ஜெயம்மாவின் நினைவிலேயே வாழ்ந்து வந்தார். இவ்வாறாக 35 ஆண்டுகள் உருண்டோடி விட்டன.
இதற்கிடையே ஜெயம்மா நினைவில் வாழ்ந்துவந்த சிக்கண்ணாவும் ஊரைவிட்டு வெளியேறியிருக்கிறார். சுமார் 35 ஆண்டுகள் கழித்து தன்னுடைய காதலியின் நிலை சிக்கண்ணாவுக்கு தெரியவந்துள்ளது.இதனையடுத்து ஜெயம்மாவை தேடிச் சென்றிருக்கிறார்.
அங்கு சிக்கண்ணாவும், ஜெயம்மாவும் மேலக்கோட்டை கோயிலில் திருமணம் செய்துக் கொண்டுள்ளனர்.