நீயே உன்னால் உனக்காக அறக்கட்டளை சார்பில் குடியரசு தின விழா வண்ணக் கோலப்போட்டி :
Republic Day Color Contest on behalf of the Foundation for Yourself:
நீயே உன்னால் உனக்காக அறக்கட்டளை, தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கம், தேசிய மக்கள் நல அறக்கட்டளை, நாஞ்சில் கலையகம் மற்றும் ஐந்திணை தென்தமிழ் ஆய்வு மன்றத்துடன் இணைந்து நடத்திய குடியரசு தினவிழா நாகர்கோவில்
ஏ. எஸ். தங்கவேல் திருமண மண்டபத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது
ஐந்திணை தென் தமிழியல் ஆய்வு மன்ற நிறுவன அமைப்பாளர் முனைவர் சுபத்ரா செல்லத்துரை அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
இந்த விழாவிற்கு முன்னிலையாக தமிழ்நாடு விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கத்தின் தலைவர் ஏ எஸ் டி ரமேஷ் மற்றும் தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் தென் மண்டல தலைவர் டாக்டர் எஸ் நாகராஜன் தலைமை வகித்தார்.
நாஞ்சில் கலையகத்தின் நிறுவனர் கவிஞர். கை. சீத்தா ராமன் தொடக்க உரையாற்றினார்
சிறப்பு விருந்தினராக கோ தியாகி. முத்துக்கருப்பன் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி சிறப்புரை ஆற்றினார்.
கொடி பாடலை குமரி மாவட்ட கிராமியக் கலைஞர்கள் முன்னேற்ற சங்கத்தின் செயலாளர் கலை சுடர்மணி லட்சுமி கணேஷ் அவர்கள் சிறப்பாக பாடினார்.
கடலைம்மா ஜூடி சுந்தர் அவர்கள் தேசபக்தி பாடல்
பாடினார்
இந்த விழாவில் வண்ண கோலப்போட்டி நடைபெற்றது, பங்குபெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் குடியரசு தின சிறப்பு கோலத்திற்கான பரிசும், முதல் மூன்று பரிசுகளும் நீயே உன்னால் உனக்காக அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது.
விழா முடிவில் தேசிய மக்கள் அறக்கட்டளையின் தலைவர் எஸ். கே. மனீஸ் அவர்கள் நன்றியுரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியை திருமதி விஜி பூரண்சிங் ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கினார்.
இந்த குடியரசு தின விழாவின் ஏற்படுகளை ஐந்திணை தென் தமிழியல் ஆய்வு மன்றத்தின் நிறுவனர் பேராசிரியை முனைவர். சுபத்ரா செல்லத்துரை அவர்கள் சிறப்பாக செய்திருந்தார்