அரபிக்கடலை அடக்கி ஆளும் இந்தியா
அரபிக்கடலை அடக்கி ஆளும் இந்தியா India rules over the Arabian Sea
நிறைய பேர் நாளைக்கு என்ன டிரஸ் போட வேண்டும் என்றும் நாளைக்கு எங்கே என்ன சாப்பாடு சாப்பிட வேண்டும் என்று யோசித்து கொண்டு
இருப்பார்கள்..
சிலர் தான் நாளைக்கு நம் நாடு எப்படி இருக்கும் என்று யோசித்து கொண்டு
இருப்பார்கள்.
அந்த சிலர் தான் மோடியை பற்றி நினைத்து கொண்டு இருப்பார்கள்.
ஏனெனில் மோடி செய்கின்ற ஒவ்வொரு செயலிலும் இந்தியாவின் எதிர்காலம் இருக்கிறது என்று உள்நாட்டில் உள்ளவர்கள் ஒத்து கொள்கிறார்களோ இல்லையோ வெளிநாட்டினர்கள் ஒத்துக் கொண்டுள்ளார்கள்.
இப்பொழுது கூட பாருங்கள்.. ஓமன் நாட்டிற்கு சென்று விட்டு வந்தார்.
மோடி அங்குள்ள சிவன் கோயிலுக்கு சென்று வழிபட்டதை மட்டுமே எக்போஸ்
செய்யும் மீடியாக்கள்
ஓமனின் முக்கிய துறைமுகமான "டம்" துறைமுகத்தை இந்தியா ராணுவ தளமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்று ஓமன் மன்னர் சுல்தான் காபூஸ் பின் சைத் அல் சைத் மோடிக்கு எழுதிக் கொடுத்ததை அவ்வளவாக கண்டு கொள்ளவில்லை.
இது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா?
அரபிக்கடலின் நுழைவுப் பகுதியான டம் துறைமுகத்தை இந்தியாவின் கடல் படை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஓமன் இந்தியாவுக்கு கொடுத்துள்ள இந்த உரிமையின் மூலம் இனி ஒட்டு மொத்த அரபிக் கடலும் இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது.
ஏற்கனவே பாகிஸ்தானின் குவாடர் துறைமுகத்தை சீனா கையகயப்படுத்தியதற்கு போட்டி யாக ஈரா னின் சாபாகர் துறைமுகத்தை இந்தியாவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த மோடி.
அடுத்து சீனாவின் கடற்படை தளம் இருக்கும் டிஜிபோட்டி துறைமுகத்தை எதிர் கொள்ள ஓமனின் டம் துறைமுகத்தை கைப்பற்றிக் கொண்டார்.
இது இந்தியாவின் மிகப்பெரிய வெற்றி என்றே சொல்ல வேண்டும்.
ஏனெனில் இந்தியாவின்
மேற்கு எல்லையான அரபிக்கடல் தான் இந்தியாவின் மிக முக்கியமான பகுதி. ஏனெனில் அரபிக் கடலோரத்தில் தான் இந்தியாவின் மிக முக்கியமான துறைமுகங்களான குஜராத்தின் கந்த்லா தறைமுகம் மகாராஸ்டிராவின் நவ சேவா துறைமுகம் மும்பை துறைமுகம் கோவாவின் மர்ம கோவா துறைமுகம் கர்நாடகாவின் பனாம்பூர் துறைமுகம் கேரளாவின் கொச்சின் துறைமுகம் என்று ஆறு முக்கியமான துறைமுகங்கள் உள்ளது.
இந்த துறைமுகங்களை குறி வைத்தே சீனா பாகிஸ்தானின் குவாடர் துறைமுகத்தை கைப்பற்றி கொண்டது.
ஒரு வேளை சீனா இந்தியா போர் வந்தால் சீனக் கடற்படை பாகிஸ்தானின் கடற்படையோடு இணைந்து குவாடர் துறைமுகத்தில் இருந்து நம்முடைய துறைமுகங்களை தாக்க வருவார்கள்.
இந்த அபாயத்தில் இருந்து இந்தியாவை காப்பாற்ற நினைத்த மோடி குவாடர் துறைமுத்திற்கு மிக அருகில் சுமார் 76 கடல்மைல் தொலைவில் இருக்கும் ஈரானின் சாபஹர் துறைமுகத்தை கைப்பற்றி அங்கு தயார் நிலையில் இந்திய கடற்படை யை வைத்துக் கொண்டார்.
இதை எதிர் பாராத சீனா ஆரம்பத்தில் தடுமாறினா லும் அடுத்து ஆப்பிரிக்க நாடான டிஜிபோட்டியில் தன்னுடைய கடற்படை தளத்தை அமைத்தது.
இந்த டிஜிபோட்டி நாடு சீனாவிடன் லட்சக்கணக்கான கோடிகளை கடன் வாங்கி காலம் தள்ளும் நாடு.
இந்தியா சாபஹர் துறைமுகத்தை கைப்பற்றிய பிறகே பதிலடியாக சீனா டிஜிபோட்டியில் கடற்படை
தளத்தை அமைத்தத்து.
சீனாவின் இந்த முயற்சியை
முறியடிக்க மோடி எடுத்த நடவடிக்கை தான் ஓமனின் "டம்" துறைமுகத்தை கைப்பற்றியது.
இந்த டம் துறைமுகம் டிஜிபோட்டி துறைமுகத்திற்கு 1100 கடல் மைல் தொலைவில் இருந்தாலும் அரபிக்
கடலின் நடுப்பகுதியில் இருக்கிறது.
டிஜிபோட்டி துறைமுகம் ஏமன் வளைகுடா என்கிற நீர் சந்துக்குள் தான் இருக்கிறது. அதனால் அங்கிருந்து வரும் சீனாவின் கடற்படையை அரபிக் கடலின் மையத்தில் இருக்கும் டம் துறைமுகத்தில் இருந்து இந்திய கடற்படை சுலபமாக தாக்கி அழிக்க முடியும்.
இந்த டம் துறை முகத்தை இந்தியா கைப்பற்றி யதால் அரபிக் கடலில் தன்னுடைய முழு ஆளுமையை நிலை நாட்டியதோடு இல்லாமல் ஓமன் ஏமன்
சவுதி அரேபியா போன்ற அரபு நாடுகளின் கடல் பகுதி கள் இந்தியாவின் கடற்படை யின் கண்காணிப்பில் வந்து விடும்.
சூப்பர் ல..
இதில் என்ன ஆச்சரியம் என்றால் டிஜி போட்டி நாடு சீனாவிடம் கடன் பட்ட நாடு. அதனால் அது சீனாவின் கடற்படை யை வைத்து கொள்ள ஒத்துக் கொண்டது.
ஆனால் ஓமன் ஒன்றும் இந்தியாவுக்கு கடன் பட்ட நாடு கிடையாது. மாறாக
அங்கு வாழும் சுமார் 32 லட்சம் இந்தியர் களுக்கு வேலை கொடுத்து சோறு போடும் நாடு.
இப்படி வல்லமையான நாடு எப்படி இந்தியாவின் வலைக்குள் விழுந்தது என்பது தான் என்னுடைய ஆச்சரியம்.
மோடியின் மிக சிறந்த ராஜ தந்திர நடவடிக்கை களில் முக்கியமான ஒன்று ஓமனின் டம் துறைமுகத்தை இந்திய கடற்படை பயன் படுத்தி கொள்ள மோடி எடுத்து கொண்ட முயற்சி என்றே சொல்ல வேண்டும்..