தமிழகத்தில் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு அனைத்து கட்சி எம்.பி.க்கள் ஆதரவு தர வேண்டும்- இ.பி.எஸ்.,

தமிழகத்தில் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு அனைத்து கட்சி எம்.பி.க்கள் ஆதரவு தர வேண்டும்- இ.பி.எஸ்.,
தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் எடப்பாடி பழனிசாமி இன்று காலை சாமி தரிசனம் செய்தார்.

 தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை சாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்து வெளியே வந்த அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்.

தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து கட்சி எம்.பி.க்களும் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.