அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கம் காவேரி ரத யாத்திரைக்கு குளித்தலையில் சிறப்பான வரவேற்பு
All India Hindu Temples Protection Association's Kaveri Ratha Yatra received a warm welcome at Khuthalai.

அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் மற்றும் அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை நடத்தும் 13 ஆம் ஆண்டு காவிரி விழிப்புணர்வு ரத யாத்திரையானது குடகு மலையில் இருந்து பல்வேறு மாவட்டங்கள் வழியாக இன்று திருச்சி மாவட்டம் முசிறி வழியாக குளித்தலைக்கு வருகை தந்தது.ரதத்தில் வந்திருந்த காவிரி தாய்க்கு காவிரி நதியில் சிறப்பான அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இந்த ரத யாத்திரையில் அகில பாரதிய சந்நியாசிகள் சங்கத்துடைய நிறுவனர் வாழும் கலியுக சித்தர் தவத்திரு.சுவாமி இராமானந்தா மகாராஜ் அவர்கள் தலைமையில் நாகேஷ்வரந்தா சரஸ்வதி சுவாமி , மேகானந்தா சரஸ்வதி சுவாமி , கார்த்தியானந்தா சரஸ்வதி சுவாமி ,கோபால் சுவாமி , லேபமுத்ரானந்தா சுவாமி, முருகானந்தா சுவாமி , ஞானானந்தாபுரி சுவாமி , மீனாட்சி சுந்தரானந்தா சுவாமி, கைலாச ஆனந்தாபுரி சுவாமி,சங்கு மேஷ்வரானந்தாபுரி சுவாமி, ரவிச்சந்திரன் ஜி ,பரமானந்தம் ஜி , வித்தியாம்பா மாதாஜி சரஸ்வதி அம்மா ஆகியோர் உடன் வந்திருந்தனர்.
இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் தேசிய தலைவர் அருள்வேலன் ஜி தலைமையில் பொறுப்பாளர்கள் கருணாநீதி , ராமகிருஷ்ணன், ஆனந்த் , தியானேஷ் , வினோத் , சுந்தர் , கல்யாண வெங்கட்ராமன் , சரவணன், பிரகாஷ், மாணிக்கவேல் ,
பாலகிருஷ்ணன் , கண்ணன் , செந்தில் மற்றும் பல நிர்வாகிகள் இந்த விழா ஏற்பாட்டுகளை செய்து இருந்தனர்.சங்கத்தின் தலைவர் அருள்வேலன் ஜி செய்தியாளர்களை சந்தித்த போது தமிழக அரசுக்கு மிக முக்கிய கோரிக்கையாக குளித்தலை மருதூர் அருகே தடுப்பணை கட்டிட ஏற்கனவே அரசாணை பிறப்பித்து ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் பல ஆண்டுகள் ஆகியும் அந்த பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு விரைவில் அந்த தடுப்பணையை உடனே கட்டிட வேண்டும் அந்த தடுப்பணை கட்டினால் சுற்றுவட்டாரத்தில் உள்ள சுமார் ஒரு 20 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்து கிராமங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயமானது சிறப்பாக நடைபெற்று பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வார்கள் என்பதை கருத்தில் கொண்டு தமிழக அரசு உடனே இந்த கோரிக்கையை ஏற்று தடுப்ணை கட்டும் பணிகளை உடனே தொடங்க வேண்டும் என பொதுமக்கள் சார்பாக தமிழக அரசை கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றார்.