வெனிசுலாவில் நூற்றாண்டில் காணாத அதிர்ச்சி: இரு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள்;
காரகாஸ்
வெனிசுலாவில் அடுத்தடுத்து இரு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டு மக்களை உலுக்கி போட்டுள்ளன. இதில் முதலில்
ரிக்டர் அளவுகோலில் 7.1 அளவிலான நிலநடுக்கமும், பின்னர் 7.5 அளவிலான நிலநடுக்கமும் ஏற்பட்டன. முதலில் மொரோன் நகரில்இருந்து மேற்கு பகுதியிலும்,
காரகாஸ் நகரில் இருந்து 168 கி.மீ. தொலைவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது....
2-வது நிலநடுக்கம் மொரோன் நகரில் இருந்து 16 கி.மீ. தொலைவில் ஏற்பட்டது. இதுபற்றி அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட செய்தியில், தலைநகர்
காரகாஸ் நகரில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டதில், பல்வேறு பகுதிகளில் இருந்த கட்டிடங்கள் குலுங்கின. ஒரு நூற்றாண்டில் இல்லாத அளவுக்கு சக்தி வாய்ந்த
நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது என தெரிவித்தது.
பல இடங்களில் சுவர்கள் இடிந்து விழுந்தன. பொதுமக்கள், தங்களுடைய செல்ல பிராணிகளை தூக்கிக்கொண்டு தெருக்களில் தஞ்சமடைந்தனர். இதனால்
பரபரப்பாக இயங்கி வந்த உணவு விடுதிகள் மற்றும் பிற வர்த்தக கடைகளில் இருந்தவர்கள் அலறியடித்து ஓடினர் சாலை முழுவதும் புழுதி பறந்தது. வீடுகள்,
கட்டிடங்கள் குலுங்கின. பலர் காயமடைந்துள்ளனர்..

லட்சக்கணக்கானோர் பலி...
இந்த இரு நிலநடுக்கங்களும் முறையே 22 கி.மீ. மற்றும் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தன. இதுபோன்று பூமியின்
மேற்பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கங்களால், அவற்றின் தாக்கம் அதிக அளவில் பரவி இருக்கலாம் எனவும் சுமார்
1,000 முதல் 10,000 பேர் பலியாகி இருக்க கூடும் என்றுஅஞ்சப்படுகிறது. எனினும், இந்த எண்ணிக்கை இன்னும் உயரக்கூடும் என
அதிர்ச்சி தகவல்களை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது...


TharaRaj

