போயிங் விமான எரிபொருள் 'சுவிட்ச்'களில் கோளாறு இல்லை என்கிறது அமெரிக்கா

போயிங் விமான எரிபொருள் 'சுவிட்ச்'களில் கோளாறு இல்லை என்கிறது அமெரிக்கா
ஏர் இந்தியா' விமான விபத்துக்கு இயந்திர கோளாறோ, எரிபொருள் கட்டுப்பாட்டு 'சுவிட்ச்'கள்

புதுடில்லி : 'ஏர் இந்தியா' விமான விபத்துக்கு இயந்திர கோளாறோ, எரிபொருள் கட்டுப்பாட்டு 'சுவிட்ச்'கள் செயலிழந்ததோ காரணமாக தெரியவில்லை' என, அமெரிக்க விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 12ல் குஜராத்தின் ஆமதாபாதில் இருந்து லண்டன் புறப்பட்ட, 'ஏர் இந்தியா போயிங் 787 - -8' விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விழுந்து நொறுங்கியது. இந்த துயரச் சம்பவத்தின் முதற்கட்ட விசாரணை அறிக்கையில், விமானம் புறப்பட்டவுடன் இன்ஜின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள், 'ரன்' நிலையில் இருந்து, 'கட் ஆப்' நிலைக்கு மாறியதே விபத்துக்குக் காரணம் என குறிப்பிடப்பட்டது.

விமானத்தின் கருப்பு பெட்டியில் பதிவான விமானிகள் உரையாடலை வைத்து இது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, இந்திய விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம், போயிங் விமானங்களில் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டது...

இதைத்தொடர்ந்து, 'போயிங் 787' மற்றும் 'போயிங் 737' ரக விமானங்களில், 'ஏர் இந்தியா' ஆய்வு செய்தது. 'இதில் எந்த குறைபாடும் இல்லை' என அறிக்கை அளித்தது.

பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ள இந்த விமான விபத்திற்கான காரணத்தை அறியும் முயற்சியில், அமெரிக்க தேசிய விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமும் இறங்கியது.

இந்நிலையில் அதன் அதிகாரி பிரையன் பெட்போர்ட் கூறுகையில், “எங்கள் ஆணைய அதிகாரிகள் எரிபொருள் சுவிட்ச் அமைப்பை வெளியே எடுத்து சோதித்தனர். மேலும், பொறியாளர்களையும் விமானத்தில் ஏற்றி ஆய்வு செய்யப் பட்டது.

''இதில், போயிங் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளில் இயந்திர கோளாறு ஏற்பட்டது போல் தெரியவில்லை என்பதை மிகுந்த நம்பிக்கையுடன் கூறலாம்,” என்றார்...