கடலூர், புதுக்கோட்டை மருத்துவ கல்லூரிகளுக்கு பல் மருத்துவர்களை இடமாற்றம் செய்வதை கைவிட வேண்டும்

கடலூர், புதுக்கோட்டை மருத்துவ கல்லூரிகளுக்கு பல் மருத்துவர்களை இடமாற்றம் செய்வதை கைவிட வேண்டும்
கடலூர், புதுக்கோட்டை மருத்துவ கல்லூரிகளுக்கு பல் மருத்துவர்களை இடமாற்றம் செய்வதை கைவிட வேண்டும்

சென்னை: பல்​வேறு அரசு மருத்​து​வ​மனை​களில் பணி​யாற்​றும் பல் மருத்​து​வர்​களை கடலூர், புதுக்​கோட்டை பல் மருத்​துவ கல்லூரி​களுக்கு பணி​யிட மாற்​றம் செய்​வதை அரசு கைவிட வேண்​டும் என்று அரசு மருத்​து​வர்​கள் வலி​யுறுத்​தி​யுள்​ளனர்.

தமிழகத்​தில் சென்​னை, கடலூர், புதுக்​கோட்​டை​யில் அரசு பல் மருத்​துவ கல்​லூரி​கள் உள்​ளன. இதில், கடலூர், புதுக்​கோட்டை கல்லூரி​களில் போதிய பல் மருத்​து​வர்​கள் இல்​லாத​தால், அந்த பணி​யிடங்​களை உடனே நிரப்ப வேண்​டும்.

இல்​லா​விட்​டால், அங்கீ​காரம் ரத்து செய்​யப்​படும் என்று இந்​திய பல் மருத்​துவ கவுன்​சில் நோட்​டீஸ் அனுப்​பி​யுள்​ளது. இதையடுத்து, மருத்​துவ கல்வி ஆராய்ச்சி இயக்​ககம் (டிஎம்​இ), மருத்​து​வம் மற்​றும் ஊரக நலப் பணி​கள் இயக்​ககம் (டிஎம்​எஸ்) கட்டுப்​பாட்​டில் உள்ள அரசு மருத்​து​வ​மனை​களில் பணி​யாற்​றும் 27 பல் மருத்​து​வர்​கள் அந்த கல்​லூரி​களுக்கு இடமாற்​றம் செய்யப்​பட்​டுள்​ளனர். இதற்கு அரசு மருத்​து​வர்​கள் கடும் எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளனர்.

இதுகுறித்து அவர்​கள் கூறிய​தாவது: தமிழகத்​தில் கடந்த 10 ஆண்​டு​களாக பல் மருத்​து​வர்​களுக்கு பதவி உயர்வு கலந்​தாய்வு நடத்​தப்​பட​வில்​லை. அரசு பணிக்கு பல்மருத்​து​வர்​களும் தேர்வு செய்​யப்​பட​வில்​லை. அதனால்​தான், பேராசிரியர்​கள், உதவி பேராசிரியர்​கள் பணி​யிடங்​கள் காலி​யாக உள்​ளன.கடலூர், புதுக்கோட்டை மருத்துவ கல்லூரிகளுக்கு பல் மருத்துவர்களை இடமாற்றம் செய்வதை கைவிட வேண்டும்.

இந்த நிலை​யில், அவசர அவசர​மாக மற்ற அரசு மருத்​து​வ​மனை​களில் உள்ள பல் மருத்​து​வர்​கள் கடலூர், புதுக்​கோட்டை பல் மருத்துவ கல்​லூரி​களுக்கு கட்​டாய​மாக அனுப்பி வைக்​கின்​றனர். இதனால், அவர்​கள் ஏற்​கெனவே பணி​யாற்றி வந்த அரசு மருத் து​வ​மனை​களில் பல் மருத்​து​வர்​களுக்கு வேலைப்​பளு அதி​கரிக்​கும். சேவை கிடைக்​காமல் மக்​களும் பாதிக்​கப்​படு​வார்​கள்.

தவிர, விருப்​பமின்றி 100 கி.மீ. தூரத்​துக்கு இடமாற்​றம் செய்​வ​தால், குடும்​பத்​தை​விட்டு பிரிந்து வாழும் சூழல் ஏற்​பட்டு மன உளைச்​சலை ஏற்​படுத்​தும். உரிய நேரத்​தில் கலந்​தாய்வு நடத்​தாததும், புதி​தாக பல் மருத்​து​வர்​களை பணி நியமனம் செய்யாததும் அரசின் தவறு. இதற்​காக பல் மருத்​து​வர்​களை தண்​டிப்​பது நியா​யம் அல்ல.

மருத்​து​வர்​களை​யும், மக்​களை​யும் பாதிக்​கும் ஆள்​குறைப்பு திட்​டத்தை அரசு உடனே கைவிட வேண்​டும். புதிய பல் மருத்​துவ கல்லூரி​கள், இதர அரசு மருத்​து​வ​மனை​களுக்கு தேவை​யான பல் மருத்​து​வர்​களை நிரந்தர அடிப்​படை​யில் மருத்​துவப் பணியாளர் தேர்வு வாரி​யம் மூலம் தேர்வு செய்து நியமிக்க வேண்​டும். அதற்கு முன்​பு, ஏற்​கெனவே பணி​யில் உள்​ளவர்​களுக்கு கலந்​தாய்வு நடத்த வேண்​டும் என அவர்​கள்​ தெரி​வித்​தனர்​.