தமிழக வளர்ச்சி குஜராத், பிஹாரைவிட பின்தங்கி உள்ளது: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கருத்து

தமிழக வளர்ச்சி குஜராத், பிஹாரைவிட பின்தங்கி உள்ளது: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கருத்து
இல்லந்தோறும் மூவர்ணக் கொடி’ என்ற விழிப்புணர்வு பேரணியை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், சென்னை ஸ்டான்லி மருத்துவமனை அருகில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்

சென்னை: ‘குஜ​ராத், பிஹார், உத்​தரப்பிரதேசத்தை விட வளர்ச்​சி​யில் தமிழகம் பின்​னோக்கி உள்​ளது’ என மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் தெரி​வித்​தார். தமிழக பாஜக சார்​பில் 79-வது சுதந்​திர தினத்​தையொட்டி ‘இல்​லந்​ தோறும் மூவர்​ணக்​கொடி’ என்ற தலைப்​பில் சென்னை ஸ்டான்லி மருத்​து​வ​மனை அரு​கில் மூவர்​ணக் கொடி யாத்​திரை நடைபெற்​றது.

இதில், மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் கலந்து கொண்டு யாத்​திரையை தொடங்கி வைத்​தார்.அப்​போது செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: சமூக நீதியை பற்றி பேசுவதற்கு திமுக​வுக்கு தகுதி இல்​லை. ஜனநாயக முறை​யில் தங்​களது கோரிக்​கையை முன்​வைத்து தூய்மை பணி​யாளர்​கள் உண்​ணா​விரதம் மேற்​கொண்​டனர்.

அவர்​களிடத்​தில் பேச்​சு​வார்த்தை நடத்த அரசு தரப்​பில் யாரும் தயா​ராக இல்​லை. கரோனா காலத்​தில் மக்​கள் அனை​வரும் பயத்​தில் இருந்தபோது, தூய்மை பணி​யாளர்​கள், சுகா​தா​ரப் பணி​யாளர்​கள் தங்​களது உயிரை பணயம் வைத்து நாட்​டுக்​காக சேவை செய்​தனர்.

ஆனால், முதல்​வர் ஸ்டா​லினுக்​கு, தூய்மை பணி​யாளர்​களின் கோரிக்​கையை செவிக் கொடுத்து கேட்க நேரமில்​லாமல், சினிமா பார்த்​துக் கொண்​டிருக்​கிறார். இதுபோன்ற கொடுங்​கோல் ஆட்சிதான் தமிழகத்​தில் நடந்து கொண்​டிருக்​கிறது. அவர்​கள் மீது அடக்​கு​முறையை ஏவி, தூய்மை பணி​யாளர்​களை தாக்​கியது வன்​மை​யாக கண்​டிக்​கத்​தக்​கது. இது தொடர்​பாக சம்​பந்​தப்​பட்ட துறை​கள், ஆணை​யத்​துக்கு அவர்​களது கோரிக்​கையை எடுத்து சென்று அவர்​களுக்கு துணை நிற்​பேன்.

காங்​கிரஸ் ஆட்சி காலத்​தில் தான் அரசு துறை​கள் அதி​க​மாக தனி​யார் மயமாக்​கப்​பட்​டன. தமிழகம் வளர்ச்சி அடைந்​துள்​ளது என திமுக அரசு ஒரு மாய பிம்​பத்தை உரு​வாக்கி உள்​ளது. தமிழகத்​தின் வளர்ச்​சியை விட உத்​தரப்பிரதேசம், பிஹார், குஜ​ராத்​தின் வளர்ச்சி மிக வேக​மாக இருக்​கிறது. இவர்​களு​டன் ஒப்​பிடும்போது, நாம் பின்​னோக்கி தான் இருக்​கிறோம். இவ்​வாறு அவர் கூறி​னார்.

இதற்கிடையே, தமிழக பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் சென்​னை​யில் உள்ள தனது வீட்​டிலும், முன்​னாள் மாநில தலை​வர் அண்​ணா​மலை சென்​னையை அடுத்த பனையூரில் உள்ள தனது வீட்​டிலும், தமிழிசை சவுந்​தர​ராஜன் சாலிகி​ராமத்​தில்​ உள்​ள தனது வீட்​டிலும்​ தேசி​ய கொடியை ஏற்​றி மரி​யாதை செலுத்​தினர்​.