அற்ப விஷயங்களில்” அரசியல்.. என் அம்மாவை எதற்கு இழுக்க வேண்டும்.. பாஜகவை விளாசிய பிரியங்கா காந்தி
In trivial matters, "politics .. why should I drag my mother .. Priyanka Gandhi, the BJP's spokeswoman

அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா காங்கிரஸ் எம்.பி.யும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தியை விமர்சித்ததற்கு பதிலடி கொடுத்துள்ள பிரியங்கா காந்தி வதோரா,*
சித்தாந்தங்கள் மற்றும் பிரச்சினைகளின் அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும், மற்றவர்களை இழிவுபடுத்துவது போன்ற "அற்ப விஷயங்களில்" அல்ல என்றும் பாஜகவை விளாசியுள்ளார்.
பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உத்தரகாண்டில் சமீபத்தில் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், 'பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய துல்லிய தாக்குதலுக்கு ராகுல் காந்தி ஆதாரம் கேட்கிறார். நீங்கள் ராஜீவ் காந்தியின் மகன் தானா? இல்லையா? என்பதற்கு நாங்கள் எப்போதாவது உங்களிடம் ஆதாரம் கேட்டோமா?' என்று பேசினார்