வதந்திக்கு பதிலடி.. எங்க வீட்டில் விசேஷம்! மகிழ்ச்சி செய்தியை உருக்கமாக பகிர்ந்த மகாலட்சுமி.. குவியும் வாழ்த்து
சென்னை: விஜே மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தரை கடந்த 2022 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்திருந்தார். இவர்களுடைய திருமண செய்தி அந்த நேரத்தில் பெரிதாக பேசப்பட்டது. இந்த நிலையில் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகாலட்சுமி வெளியிட்ட பதிவு இணையத்தில் பலருடைய வாழ்த்துக்களை பெற்று வருகிறது

90ஸ் ரசிகர்களின் ஃபேவரிட் தொகுப்பாளர்களில் ஒருவரான மகாலட்சுமி கடந்த சில வருடங்களாகவே விஜய் டிவி, ஜீ தமிழ், சன் டிவி என்று எந்த சேனல் திரும்பினாலும் அங்கு பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தார். சமீபத்தில் ஒரு சில சீரியல்களில் மட்டும் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதி இவர் திருமணம் செய்து கொண்ட செய்திதான் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் இருவருக்கும் ஏற்கனவே முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்து இருக்கிறது. அதில் மகாலட்சுமிக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வாழ்ந்து வந்த மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்ததாக புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். ஆனால் அப்போது அது ஏதோ விளம்பர புகைப்படங்களாக இருக்கும் என்று குழப்பம் ஏற்பட்டது.
ஆனால் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டோம் என்று மகாலட்சுமி பிறகு விளக்கம் கொடுத்து இருந்தார். மகாலட்சுமியை விட உருவத்தில் பிரம்மாண்டமாக இருக்கும் ரவீந்தரை திருமணம் செய்து இருக்கிறார் என்று பலரும் கமெண்ட் கொடுத்துக் கொண்டிருந்தனர். அது போல திருமணம் எல்லாம் ரொம்ப நாளைக்கு நிலைக்காது, இது பணத்திற்காக நடந்த திருமணம் என்றெல்லாம் அந்த நேரத்தில் பல செய்திகளும் வதந்திகளும் பரவி வந்தது. ஆனால் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தம்பதி தங்களுடைய திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இருவரும் வெளியே செல்லும் புகைப்படங்கள் ஷாப்பிங் டின்னர் என்று வெளியே செல்லும்போது எடுக்கும் புகைப்படங்களை பதிவிட்டு தங்களை பற்றி ட்ரோல் செய்தவர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள். அதுபோல தயாரிப்பாளர் ரவீந்தர் திருமணத்திற்கு பிறகு சில சர்ச்சைகளிலும் சிக்கி இருந்தார். ஆனாலும் அதில் எல்லாம் மகாலட்சுமி தான் அவருக்கு துணையாக இருந்து வருகிறார்
சில மாதங்களுக்கு முன்பு ரவீந்தர் மோசடி வழக்கில் ஜெயிலுக்கு சென்றிருந்தார் அப்போது அவரை மகாலட்சுமி தான் ஜாமீனில் வெளியே கொண்டு வந்திருக்கிறார். அதுபோல பிக் பாஸ் நிகழ்ச்சியை ரிவ்யூ செய்து வந்த ரவீந்தர் கடந்த சீசனில் போட்டியாளராகவும் கலந்து கொண்டார். ஆனால் முதல் வாரத்திலேயே இவர் வெளியேற்றப்பட்டது பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்தாலும் நிகழ்ச்சி பற்றி ஏதாவது பேசி பரபரப்பு ஏற்படுத்திக் கொண்டிருந்தார். அதிலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான டிராகன் திரைப்படத்திலும் ரவீந்தர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்த நிலையில் ரவீந்தர் பற்றி மகாலட்சுமி வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது நேற்று ரவீந்தருக்கு பிறந்த நாளாம் அப்போது தன்னுடைய மகன் மற்றும் ரவீந்தருடன் எடுத்த புகைப்படத்தை மகாலட்சுமி சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்

அந்த பதிவில், "நேற்று எங்கள் உலகத்தை ஒன்றாக வைத்திருக்கும் மனிதனை கொண்டாடுவது பற்றியது. எங்கள் குடும்பத்தின் தூணும், என் துணையுமான மிகவும் அன்பான தந்தைக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்களுடன் இருக்கும் ஒவ்வொரு தருணமும் ஒரு ஆசிர்வாதம். ஒரு கணவனாகவும் தந்தையாகவும் உங்கள் கேரக்டரில் நீங்கள் பிரகாசிப்பதை பார்ப்பது என் இதயத்தை பெருமையாக நிரப்புகிறது. வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவிற்கு நாங்கள் உங்களை நேசிக்கிறோம்" என்று அந்த பதிவில் மகாலட்சுமி குறிப்பிட்டு இருக்கிறார்.


Yasmin fathima

