1 வருடமாக.. பொட்டு தங்கம் கூட வாங்காத ஆர்பிஐ.. என்ன காரணம்? மத்திய அரசின் மாஸ்டர் பிளான்!
சென்னை: இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 2025 நிதியாண்டில் இதுவரை தனது தங்க இருப்புகளில் எந்த மாற்றமும் செய்யாமல், அதே அளவை தொடர்ந்து பராமரித்து வருகிறது. தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுவதால், அதன் விலை குறையும்போது வாங்கலாம் என்ற எண்ணத்தில் ரிசர்வ் வங்கி இருக்கலாம் என கருதப்படுகிறது

உலகளாவிய வர்த்தகம் மற்றும் அரசியல் நிலையற்ற தன்மை காரணமாக கடந்த ஐந்து ஆண்டுகளில் தங்கத்தின் விலை 80% உயர்ந்துள்ளது. சமீபத்திய தரவுகளின்படி, ரிசர்வ் வங்கியின் தங்க கையிருப்பு இந்த ஆண்டு மார்ச் இறுதி முதல் மே இறுதி வரை 880 மெட்ரிக் டன்களாக நிலையாக உள்ளது. இது ஒரு வருடத்திற்கும் மேலாக எந்த கொள்முதலும் இல்லாமல் ஒரே மாதிரியாக இருக்கிறது.
Citi, Fitch ஆராய்ச்சி பிரிவு, மோதிலால் ஓஸ்வால் செக்யூரிட்டீஸ், ICICI வங்கி ஆகியவற்றின் விலை கணிப்புகள் ஒரு ட்ராய் அவுன்ஸ் தங்கம் $3,445ல் இருந்து பெரிய அளவில் குறையும் என்று கூறுகின்றன. உலகளாவிய அரசியல் பதட்டங்கள் குறையக்கூடும் மற்றும் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை குறைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இதனால் ரிசர்வ் வங்கி தற்போது தங்கம் வாங்குவதை நிறுத்தி வைத்து வைத்துள்ளது.


Yasmin fathima

