மத்திய அமைச்சகங்களுக்கான கர்தவ்ய பவனை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

மத்திய அமைச்சகங்களுக்கான கர்தவ்ய பவனை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
மத்திய அமைச்சகங்களுக்கான கர்தவ்ய பவனை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

புதுடெல்லி: தலைநகர் டெல்​லி​யில் கடமை பாதை (கர்​தவ்யா பாத்) அருகே கட்​டப்​பட்​டுள்ள புதிய கர்​தவ்யா (கடமை) பவனை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த கட்​டிடத்​துக்கு மத்​திய அமைச்​சகங்​கள், துறை அலு​வல​கங்​கள் மாறுகின்​றன.

டெல்​லி​யில் முக்​கிய பகு​தி​யாக விளங்​கிய ராஜ் பாத் (ராஜ பாதை) பகு​தி​யின் பெயரை கர்​தவ்யா பாத் (கடமை பாதை) என மத்​திய அரசு பெயர் மாற்​றம் செய்​தது. இப்​பகுதி சென்ட்​ரல் விஸ்டா திட்​டத்​தின் கீழ் மேம்​படுத்​தப்​பட்டு வரு​கிறது. கர்​தவ்யா பாத் அருகே கர்​தவ்யா பவன்​கள் என்ற பெயரில் நவீன வசதி​களு​டன் அரசு அலு​வல​கங்​களை மத்​திய அரசு அமைத்து வரு​கிறது.

டெல்லி ராய்​சினா ஹில்ஸ் பகு​தி​யில் நார்த் பிளாக் மற்​றும் சவுத் பிளாக் கட்​டிடங்​களில் கடந்த 90 ஆண்​டு​களாக செயல்​பட்டு வந்த மத்​திய அமைச்​சகங்​கள் மற்​றும் பிற துறை அலு​வல​கங்​கள் எல்​லாம் கர்​தவ்யா பவன்​களுக்கு மாற்​றப்​படு​கின்​றன. இதற்​காக 10 புதிய கர்​தவ்யா பவன்​கள் அமைக்​கப்​பட்டு வரு​கின்​றன. அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளை ஒரே கூரையின் கீழ் கொண்டு வரும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

1950 முதல் 1970 வரையிலான காலகட்டங்களில் கட்டப்பட்ட பழைய கட்டிடங்களான சாஸ்திரி பவன், கிரிஷி பவன், உத்யோக் பவன், நிர்மன் பவன் போன்ற கட்டிடங்களில் தற்போது மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகள் இயங்கி வருகின்றன. இந்த கட்டிடங்கள் அமைப்பு ரீதியில் காலாவதியானவை என்றும் போதுமான வசதிகள் இல்லாதவை என்றும் அரசு தெரிவித்துள்ளது.

எனவே, புதிய கட்டிடங்களைக் கட்டுவதற்கான திட்டங்களை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் மேற்கொண்டது. 10 கர்த்தவ்ய பவன்களை கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இவற்​றில் ஓர் அலு​வலக கட்​டிடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

கர்​தவ்யா பவன் - 3 கட்​டிடத்​துக்கு மத்​திய உள்​துறை அமைச்​சகம், பெட்​ரோலி​யம் மற்​றும் இயற்கை எரி​வா​யு, வெளி​யுறவுத்​துறை மற்​றும் ஊரக மேம்​பாடு, மத்​தி​யப் பணி​யாளர் நலத்​துறை மற்​றும் நில வளத்​துறை அமைச்​சகங்​கள் உட்பட பல அமைச்​சகங்​கள் மாற்​றம் செய்​யப்​படு​கின்​றன. இன்​னும் 2 கட்​டிடங்​களின் கட்​டு​மான பணி​கள் அடுத்த மாதம் முடிவடை​யும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இன்​னும் சில மாதங்​களில் மத்​திய நிதித்​துறை அமைச்​சகம் நார்த் பிளாக் கட்​டிடத்​தில் இருந்து மற்​றொரு கர்​தவ்யா பவனுக்கு மாறவுள்​ளது. பாது​காப்​புத்​துறை அமைச்​சகம் மற்​றும் பிரதமர் அலு​வல​க​மும் சவுத் பிளாக் கட்​டிடத்​தில் இருந்து மாற்​றம் செய்​யப்​பட​வுள்​ளன.

இதுகுறித்து பிரதமர் அலு​வல​கம் விடுத்​துள்ள செய்​தி​யில், ‘‘1.5 லட்​சம் சதுர மீட்​டரில் 2 தரை தளங்​கள், 7 அடுக்​கு​மாடிகளு​டன் நவீன தொழில்​நுட்​பங்​களை பயன்​படுத்தி கர்​தவ்யா பவன்​கள் கட்​டப்​பட்​டுள்​ளன. 30 சதவீத மின்​சார செலவை குறைக்​கும் வகை​யில் இந்த கட்​டிடம் வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது.

இந்த புதிய கட்​டிடங்​கள், மத்​திய அரசு அலு​வல​கங்​களின் பராமரிப்பு செலவை குறைக்​கும். பணிச் சூழல் மற்​றும் ஊழியர்​களின் நலன், சேவை ஆகிய​வற்றை மேம்​படுத்​தும். நவீன கட்​டிடங்களுக்கு உதா​ரண​மாக தி​கழும் கர்​தவ்யா பவன்​களில், ஊழியர்​கள் அடை​யாள அட்​டை மூலம்​ மட்​டுமே உள்​ளே நுழைய முடியும்​.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.