திறந்த நிலையில் மணல் ஏற்றிச்செல்லும் வாகனங்கள்
திருப்பத்தூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சாலைகளில் வாகனங்களில் ஜல்லிகள், எம்.சாண்ட் மணல், செங்கல் ஆகியவை மூடாமல் திறந்த நிலையில் கொண்டு செல்லப்படுகின்றன. காற்று வீசும்போது, அந்த வழியாக செல்வோரின் கண்களில் மணல், துகள் விழுகிறது. எனவே வாகனங்களில், மணல், ஜல்லிக்கற்களை தார்ப்பாய் போட்டு மூடி எடுத்துச் செல்ல அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும்.



Yasmin fathima

