பாஜகவுடன் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணியா? மாயாவதி திட்டவட்ட மறுப்பு
பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியதாவது:-
பா.ஜனதாவின் தேசிய ஜனநாயக கூட்டணியிலோ அல்லது காங்கிரசின் 'இந்தியா' கூட்டணியிலோ பகுஜன் சமாஜ் கட்சி இல்லை. அனைவரின் நலன்; அனைவரின் மகிழ்ச்சி என்ற அம்பேத்கரின் கொள்கையை பகுஜன் சமாஜ் கட்சி பின்பற்றி வருகிறது.

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிரான சாதிய மனப்பான்மை கொண்ட சிலர் பகுஜன் சமாஜ் கட்சியின் பிம்பத்தை கெடுக்கவும் அரசியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தவும் முயற்சிக்கின்றன.
பாரத் சமாச்சார் ஊடகம் தனது யூடியூப் சேனலில், மாயாவதி பா.ஜனதாவுடன் கைகோர்த்து விட்டார் என்றும், விரைவில் பெரிய அறிவிப்பை அவர் வெளியிடுவார் என்றும் தவறான, நச்சுத்தன்மை வாய்ந்த செய்தியை வெளியிட்டுள்ளது. தனது செயலுக்காக அந்த சேனல் மன்னிப்பு கேட்க வேண்டும்.
அரசியல் சதி திட்டத்தின் ஒரு பகுதியாக, இத்தகைய மோசமான தந்திரங்கள் விஷயத்தில் கட்சியினர் எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். யாரும் உங்களை தவறாக வழிநடத்திவிட கூடாது. அம்பேத்ரிய பிரசாரத்தை பலவீனப்படுத்த சாதிய சக்திகள் மோசமான சதிகளில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றன.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்


Yasmin fathima

